ஆஸ்துமா

ஆஸ்த்மா தாக்கு

ஆஸ்த்மாவை தூண்டும் ஒன்றுடன் உங்களுக்கு தொடர்பு உண்டாகும் போது ஆஸ்த்மா தாக்கு ஏற்படுகிறது. காற்றுப்பாதைகளை சுற்றியுள்ள தசைகள் திடீரென்று இறுகுகிறது மற்றும் காற்றுப்பாதைகள் உட்படையில் அதிகப்படியான சளி சுரக்கிறது. இந்த காரணிகள் அனைத்தும் உங்களின் அறிகுறிகளை

சட்டென்று மோசமாக்குகின்றன. ஒரு ஆஸ்த்மா தாக்குகளின் அறிகுறிகள் வருமாறு:

  • மூச்சுத்திணறல்
  • இளைப்பு
  • கடுமையான இருமல்
  • நெஞ்சில் இறுக்கம்
  • பதற்றம்

அறிகுறிகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதன் மூலமாக, ஒரு ஆஸ்த்மா தாக்கு ஏற்படுவதை உங்களால் தடுக்க முடியும், அல்லது அது மோசமடைவதை தடுக்க முடியும். ஆஸ்த்மா தாக்கு கடுமையாக இருப்பது, உயிருக்கு அச்சுறுத்தலான‌ ஒரு அவசரநிலையை ஏற்படுத்தி விடும்.

ஒரு ஆஸ்த்மா தாக்கு ஏற்படும் போசு என்ன செய்வது? உங்களுக்கான கன்ட்ரோலர் இன்ஹேலர் மருந்தளிப்புகளை நீங்கள் முறையாக எடுத்து வந்தால், உங்களுக்கு ஒரு ஆஸ்த்மா தாக்கு ஏற்படும் வாய்ப்புகள் மிக குறைவு. உங்களுக்கோ அல்லது உங்களை சுற்றியிருக்கும் யாரேனும் ஒருவருக்கோ ஒரு ஆஸ்த்மா தாக்கு ஏற்பட்டால் முதலில் செய்ய வேண்டியது அமைதியாகவும் மற்றும் ரிலாக்ஸாகவும் இருப்பதுதான், அதன் பிறகு இந்த படிநிலைகளை பின்பற்றவும்.

  • நேராக நிமிர்ந்து உட்கார்ந்து உங்கள் ஆடைகளை தளர்த்தி விடவும்.
  • உங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரிலீவர் இன்ஹேலரை தாமதமின்றி எடுக்கவும்.
  • ரிலீவர் இன்ஹேலரை பயன்படுத்திய பிறகு 5 நிமிடங்களில் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை எனில், உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தபடி ரிலீவர் இன்ஹேலரின் இதர டோஸ்களையும் எடுக்கவும்.
  • இன்னமும் நிவாரணம் கிடைக்கவில்லை எனில், உங்கள் மருத்துவரை அழைப்பது அல்லது தாமதமின்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்வது முக்கியமானதாகும். ஒரு மருத்துவரிடம் ஆலோசிக்காமல் ரிலீவர் இன்ஹேலர் டோஸ் வரம்பை மீறக்கூடாது. உங்களுக்கு அல்லது உங்களை சுற்றியுள்ள யாருக்கேனும் பின்கூறப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால்,

உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்வது முக்கியமானதாகும்:

  • நிறம் மாறிய (நீலம் அல்லது பழுப்பு) உதடுகள், முகம் அல்லது நகங்கள்
  • மூச்சு விடுவதில் கடுமையான சிரமம்
  • பேசுவது அல்லது நடப்பதில் சிரமம்
  • சுவாசிக்க சிரமப்படுவதால் ஏற்படும் அதீத பதற்றம் அல்லது பயம்
  • நெஞ்சு வலி
  • வேகமான நாடித்துடிப்பு மற்றும் முகம் வெளிறி வியர்த்தல் ஆஸ்த்மா தாக்கு குறைந்த பிறகு, ஆஸ்த்மா செயல் திட்டம் பற்றி உங்கள் மருத்துவருடன் ஆலோசிக்கவும்,

இதனால் எதிர்காலத்தில் வரும் அனைத்து தாக்குகளையும் உங்களால் தடுக்க முடியும்.

Please Select Your Preferred Language