ஆஸ்துமா

குழந்தைகளுக்கு உள்ள ஆஸ்த்மா எப்படி வித்தியாசமானது?

ஒரு குழந்தைக்கு ஆஸ்த்மா இருப்பது கண்டறியப்பட்டதும், அவர்களின் பெற்றோருக்கு வரிசையாக பல கேள்விகளை எதிர்கொள்கின்றனர் - ஏன் என் குழந்தைக்கு வந்தது? எனது குழந்தை இயல்பாக வளருமா? எனது குழந்தையால் பிடித்தமான விளையாட்டுகளை எல்லாம் விளையாட முடியுமா?

ஆனால் ஆஸ்த்மா பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. பிரச்சனை, அறிகுறிகள், தூண்டுபவைகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி முழுமையாக புரிந்து கொண்டால் உங்கள் குழந்தைக்கு இருக்கும் ஆஸ்த்மாவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிகவும் சுலபமானது, இதனால் உங்கள் குழந்தையின் வாழ்க்கை ஆரோக்கியமாகவும் மற்றும் இயல்பாகவும் இருக்கும். உலகம் முழுவதும் குழந்தைகளுக்கு இருக்கும் மிகவும் பொதுவான சுவாசப் பிரச்சனை ஆஸ்த்மா தான் என்று உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஹெச்ஓ) கூறுகிறது. லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு ஆஸ்த்மா இருக்கிறது மற்றும் அவர்கள் அதனை நன்றாக சமாளிக்கின்றனர்.

ஆகவே, நீங்கள் மட்டும் தனியாக இல்லை. பரவலான நம்பிக்கைக்கு மாறாக, குழந்தைகளுக்கு இருக்கும் ஆஸ்த்மா வயது வந்தவர்களிடத்தில் இருக்கும் ஆஸ்த்மாவை போன்றதல்ல. மூச்சுத்திணறல், இளைப்பு, இருமல் மற்றும் நெஞ்சில் இறுக்கம் போன்ற சாதாரண அறிகுறிகளில் சிலவை வயது வந்தவர்களிடத்தில் வெளிப்பட்டாலும், அதே மாதிரியான அறிகுறிகளை குழந்தைகள் வெளிப்படுத்துவதில்லை. ஆஸ்த்மா உள்ள பெரும்பாலான குழந்தைகளுக்கு இருமலே முக்கியமான அறிகுறியாக இருக்கும். நீடித்திருக்கும் இருமல் (3-4 வாரங்களுக்கும் மேலாக நீடிப்பது) குழந்தைகளுக்கு ஆஸ்த்மா இருப்பதை வெளிப்படுத்துவதாக இருக்கும். சரியான சிகிச்சை மற்றும் சமாளித்தல் உடன் ஆஸ்த்மாவை முழுமையாக கட்டுப்படுத்துவது சாத்தியமானதே என்பதை நினைவில் கொள்வது முக்கியமானது, இது ஒரு குழந்தை செய்ய விரும்பும் அனைத்தையும் உங்கள் குழந்தையால் செய்ய முடியும் என்று அர்த்தமாகிறது.

ஆஸ்த்மாவுக்கு முற்றிலும் சிகிச்சை அளிக்கக் கூடியதே, ஆகையால் உங்கள் குழந்தைக்கு உள்ள ஆஸ்த்மா மற்றும் வளர்ச்சி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஆஸ்த்மாவுக்கு சிகிச்சை அளிப்பதில் இன்ஹேலர்களே மிகவும் செயல்திறனுள்ள வழியாகும். இன்ஹேலர்கள் மூலமாக மருந்தளிப்பு கொடுக்கப்படுகிறது, ஆகவே அது நுரையீரலை நேரடியாக சென்றடைவதால் குறைந்தபட்ச பக்கவிளைவுகளை உண்டாக்குகிறது. இரண்டு வகையான ஆஸ்த்மா மருந்தளிப்புகள் உள்ளன - இவை கன்ட்ரோலர்கள் மற்றும் ரிலீவர்கள் ஆகும். அறிகுறிகள் மற்றும் காலப்போக்கில் தாக்குகளை தடுக்கவும் கன்ட்ரோலர்கள் பயன்படுத்த‌ப்படுகிறது. கன்ட்ரோலர்கள் உடனடி நிவாரணம் வழங்குவதில்லை என்பதை நினைவில் கொள்வது முக்கியமாகும். ரிலீவர்கள் உடனடி நிவாரணம் தருகிறது மற்றும் ஒரு ஆஸ்த்மா தாக்கின் போது பயன்படுத்தப்படுகிறது. கன்ட்ரோலர்களை முறையாக பயன்படுத்தி வருவது ரிலீவர் மருந்தளிப்புகளின் தேவையை குறைப்பதில் உதவுகிறது. உங்கள் குழந்தைக்கு ஆஸ்த்மா இருந்தால், நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய சில விஷயங்கள் உள்ளன:

  • உங்கள் குழந்தைக்கு ஆஸ்த்மாவை தூண்டுபவைகளை அடையாளம் கண்டு அவற்றை தவிர்க்கவும்
  • உங்கள் குழந்தைக்கு உள்ள அறிகுறிகளை எப்படி சமாளிப்பது என்பதை உங்கள் குழந்தைநல மருத்துவருடன் ஆலோசிக்கவும்.
  • உங்கள் குழந்தைக்காக உருவாக்கப்பட்ட ஆஸ்த்மா செயல்திட்டத்தை பின்பற்றவும்
  • இன்ஹேலர்கள் மற்றும் இதர மருந்தளிப்புகளை எப்படி சரியாக பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொண்டு மற்றும் உங்கள் குழந்தைக்கு பயிற்றுவிக்கவும்.
  • கன்ட்ரோலர் மற்றும் ரிலீவர் இன்ஹேலர்களை அடையாளமிடவும், இதனால் குழப்பம் எதுவும் இருக்காது.
  • உங்கள் குழந்தை - பள்ளி, பார்க் மற்றும் இதர டிரிப்கள் என எங்கே போனாலும் சரி, அவனுக்கு/அவளுக்கு உரிய ரிலீவர் இன்ஹேலரை எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தவும்.
  • ஆஸ்த்மா பற்றி உங்கள் குழந்தைக்கு ஒரு எளிதான முறையில் விவரிக்கவும், இதனால் அதனை அவனால்/அவளால் புரிந்து கொள்ள முடியும். இன்ஹேலர்கள் எப்படி அவனுக்கு/அவளுக்கு உதவுகிறது மற்றும் ஆஸ்த்மா உடன் தொடர்புள்ள அவசரநிலைகளை எப்படி அவன்/அவளால் தவிர்க்க முடியும் என்பதை நீங்கள் விளக்கினாலும் அது அவர்களுக்கு உதவிடும்.
  • ஒரு வேளை ஆஸ்த்மா அட்டாக் ஏற்பட்டால், நீங்கள் முதலில் செய்ய வேண்டியது அமைதியாக இருப்பது மற்றும் உங்கள் குழந்தையிடம் எல்லாம் சரியாகி விடும் என்பதை உறுதிப்படுத்துவது தான். இதனை செய்யும் போதே, உங்கள் குழந்தை மீண்டு வர உதவ ஆஸ்த்மா அவசரநிலை அறிவுறுத்தல்களை பின்பற்றவும்.
  • உங்கள் குழந்தையின் ஆஸ்த்மா பற்றி குடும்பத்தினர், பராமரிப்பாளர்கள் மற்றும் பள்ளிக்கு தெரியப்படுத்தவும், அவர்களுடன் ஆஸ்த்மா செயல்திட்டத்தை பகிர்ந்துக் கொள்ளவும் மற்றும் உங்களின் அவசரநிலை தொடர்பு தகவலை அவர்களுக்கு கொடுக்க மறந்து விடாதீர்கள்.
  • இருப்பினும் நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயம், உங்கள் குழந்தை விரும்பியபடி இருப்பதை தடுக்காதீர்கள். உங்கள் குழந்தை நடனமாட, விளையாட, நீச்சல் பயிற்சி அல்லது தற்காப்பு கலை பயிற்சி பெற விரும்பினால், அதற்கு அனுமதியுங்கள்.

உங்கள் குழந்தைக்கு ஆஸ்த்மா உள்ளது என்பதாலேயே, அவர்கள் விளையாட்டுத்தனம் நிரம்பிய குழந்தைப்பருவம் இருக்கக் கூடாது என்று அர்த்தமல்ல.

Please Select Your Preferred Language