ஆஸ்துமா

ஆஸ்த்மாவை கண்டறிதல்

ஆஸ்த்மா மற்றும் திரும்ப திரும்ப வரும் ஒரு இருமல் மிக சுலபமாக குழப்பி விடும், ஏனென்றால் இரண்டுமே ஒத்திருக்கும் அறிகுறிகளை கொண்டதாக இருக்கும். ஆகவே, பெரும்பாலும் உண்மையான பிரச்சனைக்கு சரியற்ற முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது, அல்லது சிகிச்சை அளிக்கப்படுவதே இல்லை. எனினும், கவலைப்படுவதற்கு எதுவுமில்லை. ஏனென்றால், ஆரம்ப வயதிலேயே உங்களுக்கு ஆஸ்த்மா இருக்கிறதா என்பதை கண்டறிந்து விட முடியும்.

மருத்துவ வரலாறு

உங்களின் அறிகுறிகள், மருந்தளிப்பு, ஒவ்வாமைகள் மற்றும் நீங்கள் எதிர்கொள்ளும் இதர ஆரோக்கியம் தொடர்புள்ள பிரச்சனைகள் பற்றிய துல்லியமான தகவலை உங்கள் மருத்துவரிடம் கூறுவது முக்கியமானதாகும். இது உங்களின் பிரச்சனையை மருத்துவர் துரிதமாகவும் மற்றும் சரியாகவும் கண்டறிய உதவிடும்.

குடும்ப வரலாறு

ஆஸ்த்மா பெரும்பாலும் பரம்பரையாக வரக்கூடியது. அதனால், உங்கள் குடும்பத்தின் மருத்துவ வரலாற்றை, அதாவது உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் அதே பிரச்சனை இருந்ததா என்பதை தெரிந்து கொள்வது முக்கியமாகும். இது உங்களின் புகார் பற்றி சற்றே ஆழமாக உங்கள் மருத்துவர் ஆராய உதவும் மற்றும் உங்களுக்கு ஆஸ்த்மா பரிசோதனை செய்ய வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதையும் தீர்மானிக்க முடியும்.

உடல் பரிசோதனை மற்றும் சோதனைகள்

பெரும்பாலான நோய் கண்டறிதல் மருத்துவ வரலாறு அடிப்படையிலானது என்பதால், பிரச்சனை மற்றும் கொடுக்கப்பட வேண்டிய சிகிச்சை பற்றி முழுமையாக உறுதிப்படுத்தி கொள்ள ஒரு சுவாசப் பரிசோதனைக்கும் உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.

பீக்-ஃப்ளோ மீட்டர் பரிசோதனை

ஒரு பீக்-ஃப்ளோ மீட்டர் என்பது உங்கள் நுரையீரல் சக்தியை தீர்மானிக்க உதவும் ஒரு சிறிய, கையடக்க உபகரணமாகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அந்த உபகரணத்தினுள் காற்றை ஊதுவது தான், மற்றும் அது உங்கள் நுரையீரல்கள் எவ்வளவு வலுவாக உள்ளன என்பதை காட்டி விடும்.

ஸ்பைரோமெட்ரி பரிசோதனை

உங்களின் அறிகுறிகளை அறிந்து மற்றும் பரிசோதனையை முடித்ததும், உங்களுக்கு ஆஸ்த்மா இருப்பதாக மருத்துவர் சந்தேகித்தால், உங்கள் நுரையீரல் செயல்திறனை தீர்மானிக்க அவர் ஒரு ஸ்பைரோமெட்ரி பரிசோதனையை செய்யலாம். உங்கள் நுரையீரல்கள் தக்க வைக்கும் காற்றின் அளவு, அதே போல் நுரையீரல்களுக்கு உள்ளே மற்றும் வெளியே காற்று எவ்வளவு நன்றாக வந்து செல்கிறது என்பதையும் ஸ்பைரோமீட்டர் அளவிடும். இதன் முடிவுகள் மதிப்புகளாக மற்றும் ஒரு வரைகோடுகளாக தோன்றும்.

உங்களுக்கு நோய்கண்டறிவதில் மற்றும் ஆஸ்த்மா இருக்கும் போது கண்காணிக்கவும் இரண்டு பரிசோதனைகளுமே உதவுகிறது என்றாலும், அவை 6 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆகவே, உங்கள் குழந்தைக்கு ஆஸ்த்மா இருப்பதை முன்கூட்டியே மற்றும் சரியாகவும் கண்டறியப்படுவதை உறுதிப்படுத்த, குழந்தைநல மருத்துவருடன் நீங்கள் தீவிரமாக ஒத்துழைக்க வேண்டும். தூண்டுபவைகளை கண்டறியவும், அறிகுறிகள் உள்ளதா என்று கவனிக்கவும் மற்றும் இளம் வயதிலேயே ஆஸ்த்மாவை கட்டுப்படுத்த குழந்தையின் வளர்ச்சியை கவனிப்பதில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

Please Select Your Preferred Language