ஆஸ்துமா

உங்கள் நிலையை சமாளித்தல்

ஆஸ்த்மா ஒரு பிரச்சனை தான், ஆம். ஆனால், முறையான சிகிச்சை மற்றும் ஆஸ்த்மா செயல்திட்டத்தால், உங்களுக்குள்ள ஆஸ்த்மாவை நீங்கள் முழுமையாக கட்டுப்படுத்தலாம், மற்றும் உங்களுக்கு அந்நோய் இருப்பதையே கிட்டத்தட்ட மறந்து விடலாம்.

உங்களுக்கு நோயை தூண்டுபவைகளை தவிர்க்கவும் ஒவ்வொருவருக்கும் உள்ள ஆஸ்த்மா வித்தியாசமானது, மற்றும் அதனால் அவர்களுக்கு நோயை தூண்டுபவைகளும் வித்தியாசமாகவே இருக்கும். உங்கள் பிரச்சனையை முழுமையாக கட்டுப்படுத்த, உங்களுக்கு தூண்டி விடுபவைகளை நீங்கள் அடையாளம் காண்பதும் மற்றும் அவற்றை உங்களால் மிக நன்றாக இயன்ற வரையில் தவிர்ப்பதும் முக்கியமானது.

முறையான மருந்தளிப்பு உங்கள் மருத்துவர் பொதுவாக இரண்டு வகையான மருந்துகளை வழக்கமாக பரிந்துரைப்பார் - வேகமான நிவாரணம் (ரிலீவர் அல்லது ரெஸ்க்யூ) மற்றும் நீண்ட கால (கன்ட்ரோலர்) ஆகியனவாகும். வேகமாக நிவாரணம் தரும் மருந்துகள் உடனடியாக நிவாரணத்தை வழங்குகின்றன, அதே சமயம் நீண்ட கால மருந்துகள் அறிகுறிகள் மற்றும் தாக்குகளை தடுக்கிறது. உங்களுக்குள்ள ஆஸ்த்மவை நீங்கள் முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருக்க பரிந்துரைக்கப்படும் இந்த மருந்துகளை நீங்கள் எடுப்பது அத்தியாவசியமானது.

ரிலீவர் மற்றும் கன்ட்ரோலர் மருந்துகள் என இரண்டுமே இன்ஹேலர்கள் வழியாக எடுக்கப்படுகிறது, இது ஆஸ்த்மாவுக்கு சிகிச்சை அளிப்பதில் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. பீக் ஃப்ளோ மீட்டரை பயன்படுத்துதல் பீக் ஃப்ளோ மீட்டர் என்பது ஒரு சிறிய உபகரணமாகும், இது உங்கள் ஆஸ்த்மாவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் நுரையீரல்களில் இருந்து எவ்வளவு நன்றாக காற்றை உங்களால் வெளியேற்ற முடிகிறது என்பதை கணக்கிடுவதன் மூலமாக உங்கள் நுரையீரலின் சக்தியை அளவிடுகிறது. உங்கள் மருத்துவரின் உதவியுடன், உங்கள் நுரையீரல்களுக்கு நீங்கள் ஒரு இலக்கை அமைத்துக் கொள்ள முடியும், மற்றும் உங்களின் முன்னேற்றத்தையும் அவ்வப்போது அளவிட முடியும். உங்களுக்குள்ள ஆஸ்த்மாவை கட்டுப்படுத்த பீக் ஃப்ளோ மீட்டரை எப்படி செயல்திறனுடன் பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொள்ள ஒரு ப்ரீத்ஃப்ரீ க்ளினிக்கிற்கு வாருங்கள்.

ஆஸ்த்மா செயல் திட்டம் ஆஸ்த்மா செயல் திட்டம் என்பது, உங்களுக்குள்ள ஆஸ்த்மாவை கட்டுப்படுத்த உதவ உங்கள் மருத்துவருடன் சேர்ந்து நீங்கள் உருவாக்கும் ஒரு எழுத்துப்பூர்வமான திட்டமாகும். உங்களுக்குள்ள ஆஸ்த்மாவை அன்றாடம் அடிப்படையில் எப்படி கட்டுப்படுத்துவது, அதாவது என்ன வகையான மருந்துகளை எடுக்க வேண்டும் மற்றும் அவற்றை எப்போது எடுக்க வேண்டும் போன்றவற்றை ஆஸ்த்மா செயல் திட்டம் காட்டுகிறது. மேலும் உங்களுக்கு ஆஸ்த்மா அறிகுறிகள் அதிகரித்தால் மற்றும் ஆஸ்த்மா தாக்குகளின் போது என்ன மருந்துகளை எடுக்க வேண்டும் மற்றும் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் இந்த திட்டம் உங்களுக்கு கூறுகிறது. மருத்துவரை எப்போது அழைக்க வேண்டும் அல்லது அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என்பதையும் இந்த திட்டம் விவரிக்கிறது.

மருத்துவரை முறையாக சந்திக்கும் வருகைகள் உங்களின் அறிகுறிகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும், ஒரு முறையான அடிப்படையில் உங்கள் மருத்துவரை சந்திப்பது முக்கியமானது. உங்களின் அறிகுறிகள், ஆஸ்த்மா மருந்தளிப்பு மற்றும் நீங்கள் எடுத்து வரக்கூடிய இதர மருந்தளிப்பு குறித்து எப்போதுமே உங்கள் மருத்துவருடன் பேசுங்கள். இந்த வகையில், உங்களுக்குள்ள ஆஸ்த்மாவை கட்டுப்படுத்திட, தாக்குகளை தடுக்க மற்றும் ஒரு முழுமையான வாழ்க்கையை வாழ உங்களுக்கு உதவும் ஒரு செயல்திறனுள்ள ஆஸ்த்மா செயல் திட்டத்தை உருவாக்க உங்கள் மருத்துவரால் முடியும்.

Please Select Your Preferred Language