உத்வேகம்

ஆஸ்த்மாவை விரட்டி அடித்தல்

''நான் அவனுக்கு வருண் என பெயரிட்டேன்". அவனது தந்தை கூட, காற்றை போல் வேகமாக இருக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் பிறந்த‌ ஒரு சில மாதங்களிலேயே, அவனுக்கு ஏதோ ஏற்பட்டது, எங்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை.

 

வருணுக்கு சுவாசிப்பதில் தொல்லை இருந்தது. நாங்கள் பல்வேறு மருத்துவர்களிடம் சென்றோம். அவனுக்கு தொடச்சியாக மருந்து கொடுப்பது மற்றும் ஊசி போடுவது எங்களது வாழ்வில் இப்போது ஒரு அங்கமாகி விட்டது. பல ஆண்டுகளாக தூக்கமில்லாத இரவுகள் தொடர்ந்தன.

 

அவன் மிக இளமையாக மற்றும் மிக மென்மையானவனாக இருந்தான். நான் உண்மையிலேயே பயந்து விட்டேன். எப்படி ஏற்பட்டது, எந்த இடத்தில், எப்போது போன்ற கேள்விகள் இப்போது அர்த்தமற்றவை. ஆனால் அவன் மனவுறுதியை விடவில்லை. அவன் டே-க்வாண்-டோ பயிற்சியில் சேர்ந்தான்.  நானும் அவனுக்கு ஊக்கமளித்தேன் மற்றும் அவன் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை ஒருபோதும் அவன் உணராமல் இருப்பதை உறுதி செய்தேன்.

 

இந்த நிலையில் ஒரு நாள், வருண் மிக கலக்கத்தோடு வீடு திரும்பினான். அவனுக்கு வயது 8. மற்றும் அவன் டே-க்வாண்டோ-டோ இறுதிப் போட்டியை எட்டி விட்டான். அவனது சாதனையை உலகம் ஏற்றுக் கொள்ளும் என்பதாகும். அப்படியிருக்கையில், தன்னால் சுவாசிக்க சிரமப்பட்டதால் தான் எப்படி வீழ்த்தப்பட்டதை அவன் கண்ணீருடன் என்னிடம் கூறினான்.

 

நான் அவனது தந்தையுடன் பேசினேன். வருணுக்கு ஒரு இயல்பான வாழ்க்கையை நாங்கள் கொடுப்பதை உறுதி செய்ய உலகில் உள்ள சிறந்த பராமரிப்பை கண்டறிவது என்று நாங்கள் முடிவு செய்தோம். நாங்கள் அவனை ஒரு நிபுணரிடம் அழைத்துச் சென்ற போது, வருணுக்கு ஆஸ்த்மா இருப்பதாக அவர் கூறினார்.

 

எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வளர்ந்தவர்களுக்கு மட்டுமே வரும் ஒரு பிரச்சனை வருணுக்கு எப்படி வந்தது என்று எங்களை சுற்றியிருப்பவர்கள் ஆச்சரியமடைந்தனர். மேலும் இன்ஹேலர்கள் பற்றி எங்களால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேல் அது பற்றி எங்களுக்கு ஏராளமான கேள்விகள் இருந்ததாலும் தீர்வு காணும் ஒரு முயற்சியாக எங்களின் அன்புக்குரியவர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்கள் உடன் பேசினோம்.   நாங்கள் யாரிடம் கேட்டாலும், எங்களுக்கு ஒரே பதில் தான் கிடைத்தது - இன்ஹேலர்கள் குழந்தைகளின் வளர்ச்சியை மட்டுப்படுத்துகிறது. வருணால் இயல்பாக வளர முடியாது.

 

நாங்கள் முற்றிலும் மனம் கலங்கி விட்டோம். நாங்கள் பயந்து போய், வருணுக்கு உள்ள ஆஸ்த்மாவுக்கு சிகிச்சை அளிக்க மாற்று சிகிச்சை ஏதேனும் உள்ளதா என அறிய மருத்துவரிடம் சென்றோம். ஆனால் இதை பற்றி மருத்துவரோ கவலைப்படுவதற்கு எதுவுமில்லை என்று கூறி விட்டார். நாங்கள் இன்ஹேலேஷன் தெரபியை தொடங்கினோம். இதன் பிறகு மெதுவாக, ஆனால் நிச்சயமாக நல்ல முடிவுகளை காணத் தொடங்கினோம்.

 

வருண் டே-க்வாண்-டோவில் சிறப்பாக வர தொடர்ந்து கடினமாக முயற்சித்து வந்தான். இன்ஹேலர் தெரபி மற்றும் அவனது ஆரோக்கியமான பழக்கங்கள் ஒவ்வொரு கட்டத்திலும் அவனுக்கு ஆதரவு அளித்தது மற்றும் ஆஸ்த்மா அவனை தடுத்து நிறுத்தவில்லை.

 

இன்று, வருண் ஒரு ஆஸ்த்மா நோயாளி என்பதை யாராலும் நம்ப முடியாது; மற்றும் அது மட்டுமல்ல அவன் ஏராளமான பதக்கங்களையும் பெருமையுடன் அணிந்துள்ளான்.

Please Select Your Preferred Language