ஆஸ்துமா

ஆஸ்துமா அறிகுறிகள்

ஆஸ்த்மாவின் அறிகுறிகளை அடையாளம் காண்பது மிக எளிதானது. ஆஸ்த்மாவின் பொதுவான அடையாளங்கள் வருமாறு:

மூச்சு விட முடியாமை அல்லது மூச்சுத்திணறல்: உங்கள் நுரையீரல்களுக்கு உள்ளே அல்லது வெளியே போதுமான காற்று சென்று வரவில்லை என்று நீங்கள் உணர்கிறீர்கள், மற்றும் அது குறிப்பாக சுவாசிக்க மிகவும் கஷ்டப்படுகிறீர்கள் கண்டறியப்படுகிறது.

அடிக்கடி வரும் அல்லது நீடித்திருக்கும் இருமல்: உங்களுக்கு பல நாட்களுக்கு பிறகும் போகாத இருமல் உள்ளது மற்றும் இரவில் அல்லது உடற்பயிற்சி செய்த பிறகு உங்களுக்கு அடிக்கடி இருமல் வருவதை நீங்கள் கண்டுபிடிக்கிறீர்கள்.

இளைப்பு: நீங்கள் ஒவ்வொரு தடவை மூச்சு விடும் போதும் இளைப்பு ஒலியை நீங்கள் கேட்கிறீர்கள்.

நெஞ்சில் இறுக்கம்: உங்கள் நெஞ்சில் ஒரு இறுக்கமான உணர்வு, யாரோ உங்கள் நெஞ்சை அழுத்தி பிசைவது போல் அல்லது நெஞ்சில் உட்கார்ந்திருப்பது போல் தோன்றுகிறது.

ஆஸ்த்மா உள்ள ஒவ்வொரு நபருக்கும் இந்த அறிகுறிகள் எல்லாம் வெளிப்படும் என்பதில்லை. உதாரணத்துக்கு, சில மனிதர்களுக்கு அதிகமான இருமல் காரணமாக இரவில் தூக்கம் கெடலாம், வேறும் சிலர் உடற்பயிற்சியின் போது மூச்சுத்திணறலை அனுபவிக்கலாம். நீங்கள் அறிகுறிகளை கவனிப்பது முக்கியமானது, இதனால் உங்கள் மருத்துவர் உங்களின் நிலையை துல்லியமாக கண்டறிய உங்களால் உதவ முடியும்.

Please Select Your Preferred Language