Home
  Breathe Free
இது இருமலா அல்லது ஆஸ்துமாவா?
சிகிச்சைமுறை &
கட்டுப்பாடு
சந்தேகங்களும்,
தீர்வுகளும்
மூக்கழற்சி
அலர்ஜி
COPD

நிகழ்வுகள்

டைம்ஸ் ஆஃப் இந்தியா நுரையீரல் பரிசோதனை முகாம்

 
ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில், டைம்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களுக்கு, “நுரையீரல் ஆரோக்கியம் குறித்த சோதனை முகாம்” மும்பையில் நடத்தப்பட்டது. நுரையீரலின் ஆரோக்கியத்தை மையப்படுத்திய மின்னஞ்சல் செய்தி ஒன்றும் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டது.

230 பேர் இந்த முகாமில் கலந்துகொள்ள ஆன்லைனிலேயே ஆர்வம் தெரிவித்திருந்தது எங்களுக்கெல்லாம் உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்த முகாம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பாகவே, ப்ரீத்ஃப்ரீ குறித்த பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் டைம்ஸ் ஆஃப் இந்தியா வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

வருபவர்களை கருத்தில்கொண்டு, பீக்ஃப்ளோ மீட்டர் வசதியுடன் கூடிய 4 மேஜைகளைஅமைத்து, அதில் ஒவ்வொன்றிலும்,, எங்கள் பிரதிநிதிகள் உதவியுடன் சோதனைக்கு வருபவர்களின் நுரையீரலின் துடிப்பை பதிவு செய்தோம். ஊழியர்கள் அனைவரும் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதற்காக, காத்திருக்கும் வசதியுடன் கூடிய தனிப்பட்ட அறையை 2 மருத்துவர்களுக்காகவும் ஒதுக்கியிருந்தோம். சாதன செயல்விளக்கத்திற்கும், ஸ்பைரோமீட்டரி சோதனைக்காகவும், சில சாவடிகளை அமைத்திருந்தோம்.

சோதனையில் பங்கேற்பதற்காக ஊழியர்கள் அனைவரும் வெள்ளம்மென திரண்டு காலை 11 மணிக்கு வந்துவிட்டனர். வந்திருந்த அனைவரும் பீக்ஃப்ளோ மீட்டர் சோதனையை எடுத்துக்கொண்டார்கள் அதில் சிலருக்கு ஸ்பைரோமீட்டரி சோதனையும் செய்ய வேண்டி இருந்ததால், மேல் பரிசோதனைக்காக அவர்கள் மருத்துவரிடம் அனுப்பி வைக்கப்பட்டனர். தங்கள் நுரையீரலின் நிலைக்கு ஏற்ப சீரிய கவனத்தையும், நேரத்தையும் வழங்கினார்கள் என்பதை நாங்கள் உறுதியாக கூறமுடியும். மருத்துவ உதவி தேவைப்படும் ஊழியர்கள் சோதிக்கப்பட்டு மருத்துவரின் ஆலோசனையின்படி சிகிச்சைப்பெறுவதற்கான வழிமுறைகளையும் கேட்டுத் தெரிந்துகொண்டனர்.

இரண்டு நாள் நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

பின்வரும் இரண்டு மருத்துவர்களும் முகாமை சிறப்பான முறையில் நடத்த எங்களின் ப்ரீத்ஃப்ரீ அமைப்பிற்கு ஆதரவு நல்கினர்.. ப்ரீத்ஃப்ரீ அமைப்பின்மேல் நம்பிக்கைக் கொண்டு, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக எங்களுடன் சேர்ந்து பணியாற்றியமைக்காக, அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.

முதல் நாள் அதாவது 24 பிப்ரவரி, 2010
டாக்டர். ராஜ்ரத்தன் சதவர்த்தி – நெஞ்சக மருத்துவர், மலாத்
டாக்டர். ரோஹித் ஹெக்தே (CHEST PG-GT HOSP)
டாக்டர். ஆனந்த் குமார் – நெஞ்சக மருத்துவர், முலந்த்

இரண்டாம் நாள் அதாவது 25 பிப்ரவரி 2010
டாக்டர். விவேக் சிங் – நெஞ்சக மருத்துவர், வஷி
டாக்டர். வித்யா தோஷி – நெஞ்சக மருத்துவர், பாட்டியா மருத்துவமனன

பணியாளர்களை சந்திப்பதற்கு உதவிய திரு. சந்திரசேகர் முகர்ஜி, திரு. சுஜோய் மசும்தர் மற்றும் திரு. தீபக் குமார் (டைம்ஸ் ஆஃப் இந்தியா) ஆகியோருக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தங்களது இடத்தில், "நுரையீரல் பரிசோதனை முகாம்" நடத்த வேண்டும் என்று விரும்பும், நிறுவனம், பள்ளி, சமூகம் அல்லது சமூக மையம் குறித்து உங்களுக்குத் தெரியவந்தால் எங்களுக்கு info@breathefree.com முகவரியில் தெரியப்படுத்துங்கள்

 
 

  படத் தொகுப்பு