Home
  Breathe Free
இது இருமலா அல்லது ஆஸ்துமாவா?
சிகிச்சைமுறை &
கட்டுப்பாடு
சந்தேகங்களும்,
தீர்வுகளும்
மூக்கழற்சி
அலர்ஜி
COPD

நிகழ்வுகள்

ஆஸ்துமா விழிப்புணர்வு பள்ளிகள் - கொல்கத்தா

 
ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளியில் படிக்கும்போது அந்நோயின் பாதிப்பினால் தாக்கப்படும்போது அவர்களை காக்க ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகிகளுக்கும் பயிற்சி அளிக்கும் விதத்தில் 'ஆஸ்துமா விழிப்புணர்வு பள்ளிகள்' என்ற தலைப்பில் பிரச்சார இயக்கம் கொல்கத்தாவில் 17 ஆம் தேதி செப்டம்பர் மாதம் 2010 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோயின் பாதிப்பு ஏற்படும்போது எப்படி அவர்களுக்கு முதலுதவி செய்வது மற்றும் ஆஸ்துமா அறிகுறிகள் தென்படும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்கள் பெற்றோரிடம் அதனை முறையாக தெரிவிப்பது போன்ற பயிற்சிகள் முதன்முறையாக இந்தியாவில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

டாக்டர். சுபாசிஸ் ராய், (குழந்தைநல ஆலோசர்கர், கொலம்பியா ஆசியா மருத்துவமனை & சிசு சஞ்ஜீவன் மருத்துவமனை, சால்ட் லேக்) மற்றும் டாக்டர் பல்லாப் சாட்டர்ஜி, (குழந்தைநல ஆலோசகர், கொலம்பியா ஆசியா மருத்துவமனை & AMRI மருத்துவமனை, சால்ட் லேக்) ஆகியோர் 'ஆஸ்துமா விழிப்புணர்வு பள்ளிகள்' என்ற இந்தியாவில் தொடங்கப்படும் நிகழ்வு குறித்து பத்திரிகையாளர்களுக்கு விளக்கினார்.

திருமதி. M. நார்மன், (மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியை - அசெம்ப்ளி ஆஃப் காட் சர்ச், டோலிகுஞ்ச்) மற்றும் திருமதி. லீனா ஹராத்தி (மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியை - ஆந்திரா அசோசியேஷன் ஸ்கூல்) ஆகியோர் முன்வந்து இந்நிகழ்வானது பள்ளிகளுக்கு எந்த அளவில் பயனைத் தந்து ஆஸ்துமா பாதிக்கப்பட்ட குழந்தைகளை காக்கிறது என்ற கருத்தினை பகிர்ந்து கொண்டதற்கு அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

40 பள்ளிகளிலிருந்து வந்த 185 ஆசிரியர்கள் இதில் பங்கேற்றனர். இந்த பயிற்சிக்கு எல்லார் மத்தியிலும் அமோக ஆதரவு கிடைத்தது. மருத்துவர்களிடமிருந்து நேரடியாக தங்கள் சந்தேகங்களை ஆசிரியர்கள் கேட்டு அறிந்துகொண்டதால் 'ஆஸ்துமா விழிப்புணர்வு பள்ளிகள்' இயக்க பிரச்சாரத்தின் முதல் பயிற்சி நல்ல வரவேற்பைப் பெற்று ஆசிரியர்களுக்கு பயனுள்ளபடி அமைந்தது.

கொல்கத்தாவில் உள்ள பத்திரிகைகளும், தொலைக்காட்சி சேனல்களும் கொல்கத்தாவில் உள்ள பல பள்ளிகளுக்கும் இந்நிகழ்ச்சி சென்று சேரும் வாய்ப்பை அளித்தமைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

'ஆஸ்துமா விழிப்புணர்வு பள்ளிகள்' இயக்கத்தில் உங்கள் பள்ளியும் ஒன்றாக இருக்க விரும்பினால், பின்வரும் முகவரியில் எங்களிடம் அதை தெரிவிக்கவும்: 
http://www.breathefree.com/Asthma_Alert_Schools.html
 
 
 

  படத் தொகுப்பு