Home
  Breathe Free
இது இருமலா அல்லது ஆஸ்துமாவா?
சிகிச்சைமுறை &
கட்டுப்பாடு
சந்தேகங்களும்,
தீர்வுகளும்
மூக்கழற்சி
அலர்ஜி
COPD

இது இருமலா அல்லது ஆஸ்துமாவா?

 
இது இருமலா அல்லது ஆஸ்துமாவா?
இருமல் என்றால் என்ன?
ஆஸ்துமா என்றால் என்ன?
ஆஸ்துமாவின் அறிகுறிகள்
ஆஸ்துமா பகுப்பாய்வு
ஆஸ்துமா காரணிகள் மற்றும் அதை எவ்வாறு தவிர்ப்பது
இருமலைப் பற்றி மேலும் அறிக

  இது இருமலா அல்லது ஆஸ்துமாவா?


இருமலும் ஆஸ்துமாவும் முற்றிலும் வேறுபட்டவை. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மூச்சுவிடுதல் சிரமமாகவும் அடிக்கடி இருமலும் இருக்கும். நீங்களோ அல்லது உங்கள் குழந்தையோ இருமலைக் கட்டுப்படுத்த அடிக்கடி மருந்து எடுப்பவர்களானால் அது உண்மையில் வேறு பிரச்சனையாகக் கூட இருக்கலாம். உண்மையில் அடிக்கடி வந்துபோகும் இருமல் ஆஸ்துமாவின் அறிகுறியாக இருக்கலாம். உங்களுக்கோ அல்லது உங்களுக்கு விருப்பமானவர்களுக்கோ ஆஸ்துமா இருப்பது தெரியவந்தால், அதுவே வாழ்வின் முடிவல்ல. ஏனென்றால் அதைக் கட்டுப்படுத்தி நீங்கள் சாதாரணமாகவே வாழலாம், ஆஸ்துமா உள்ள பலரும் வாழ்வதைப்போல நல்ல வாழ்க்கையை வாழலாம்.



















  இருமல் என்றால் என்ன?


நிச்சயமாக ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்களுக்கு இருமல் வந்திருக்கும். ஆனால் உங்களுக்கு இருமல் ஏன் வந்தது மற்றும் என்ன நடக்கிறது என்பது தெரியாது. சாதாரணமாக சொன்னால், உங்கள் நுரையீரலை பாதிக்கக்கூடியப் பொருட்களை அகற்றுவதற்கு உங்கள் உடலில் ஏற்படும் சாதாரண செயலே இருமலாகும். இந்தப் பொருட்கள் பொதுவாக தூசி, வைரஸ்கள், பாக்டீரியா அல்லது சுரப்புப்பொருட்கள் போன்றவையாக இருக்கலாம்.

இருமல் அதிகமாகவும் தொடர்ந்தும் இருந்தால், அது உங்கள் நுரையீரலில் பிரச்சனை இருப்பதைக் குறிக்கிறது.

நீங்கள் இருமல் மருந்து எடுப்பவராக இருந்தால், பல இருமல் சிரப்புகளில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் தற்காலிகமாக இருமலைக் குணப்படுத்தி நுரையீரல் பிரச்சனையை மறைத்துவிடக் கூடும் என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். அதனால் உங்களுக்குத் தொடர்ந்து இருமல் இருந்தால், உங்கள் மருத்துவரை அணுகுவதில் தாமதிக்கவேண்டாம்.










  ஆஸ்துமா என்றால் என்ன?


ஆஸ்துமா என்பது உங்கள் நுரையீரலின் சுவாசப் பாதைகள் பாதிப்படையும் நிலைமை ஆகும். அதாவது, உங்கள் நுரையீரலில் காற்றை உள்ளிழுக்கும் மற்றும் வெளித்தள்ளும் மூச்சுக்குழாய்கள்தான் அந்தப் பாதைகள். ஆஸ்துமாவில், சுவாசப் பாதைகளைச் சுற்றிலும் உள்ள தசைகள் இறுகி குறுகியதாகிவிடும். இது சுவாசிப்பதையும் கடினமாக்கும். உங்கள் சுவாசப் பாதையில் கட்டி(வீக்கம்) இருக்கும். சில நேரங்களில் சளி அல்லது கோழை சுவாசப் பாதையில் அடைத்துக்கொண்டு சுவாசிப்பதைக் கடினமாக்கும். அடிக்கடி மூச்சுத்திணறல் சப்தம் இருக்கும். ஆஸ்துமாவில், உங்கள் சுவாசப்பாதை மிகவும் உணர்ச்சிமயமாகவும், அதிக எதிர்வினையாற்றக்கூடியதாகவும் உள்ளதால் சிகரெட் பிடித்தல், பூவின் மகரந்தத்தூள் அல்லது குளிர்காற்று போன்ற தீங்கு ஏற்படுத்தும் விஷயங்களால் எரிச்சல் தொடங்கும்.

இப்பொழுது உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த நபருக்கோ ஆஸ்துமா இருந்தால் நீங்கள் முதலில் செய்யவேண்டியது: கவலைப்படத் தேவையில்லை. நீங்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கவில்லை. உலக சுகாதார மையத்தின்(WHO) அறிக்கையின்படி, 300 மில்லியனுக்கும் அதிகமானோர் தற்போது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளிடையே பொதுவாக (அதிக காலம்) காணப்படும் சாதாரண நோய் இது. இந்தியாவில் மட்டும் 25-30 மில்லியன் மக்கள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார மைய அறிக்கைக் கூறுகிறது.

முன்பெல்லாம், ஆஸ்துமாவைப் பற்றிய பல தவறான வதந்திகள் இருந்தன. ஆனால் இன்று ஆஸ்துமா பற்றி தெளிவான தகவல்களும், நவீன மருந்துகளும் இருப்பதால் நீங்கள் அந்நோய் உள்ளவராக இருந்தாலும் கவலையின்றி வாழலாம். சினிமா நடிகர்களுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் மற்றும் பிரபல தொழிலதிபர்களுக்கும் ஆஸ்துமா இருக்கிறது. அதிலிருந்து அவர்களின் முன்னேற்றத்தை ஆஸ்துமா தடுக்கவில்லை என்பதை அறியலாம் அதனால் ஆஸ்துமாவைப் பற்றி தேவையில்லாமல் கவலைப்பட்டு உங்களுடைய அல்லது உங்கள் அன்புக்குரியவர்களின் வாழ்க்கை சந்தோஷத்தை ஏன் கெடுத்துக் கொள்ள வேண்டும்?

மேலே திரும்புக











  ஆஸ்துமாவின் அறிகுறிகள்


ஆஸ்துமாவிற்கான வழக்கமான அறிகுறிகளாவன:
மார்பில் இறுக்கம்: யாரோ நெஞ்சை அமுக்குவதைப் போலவோ அல்லது அதில் அமர்ந்திருப்பது போலவோ இறுக்க உணர்வு.
மூச்சுத் திணறல்: மூச்சு விடமுடியாமல் திணறுதல், அதாவது, உங்கள் நுரையீரலுக்குப் போதுமான காற்றை உள்ளிழுத்து வெளிவிட உங்களால் முடியாத நிலை. முக்கியமாக மூச்சை வெளிவிடுதல் கடினமாக இருக்கும்.
தொடர்ச்சியான அல்லது இடைவிடாத இருமல்: இருமல் நிற்காமல் தொடர்ந்து கொண்டே இருக்கும். இரவிலோ அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகோ அடிக்கடி இருமுதல்.
மூச்சிறைப்பு: மூச்சுவிடும்போது விசில் போன்ற சப்தம் வெளிவரும்.

பிற அறிகுறிகள்:
இரவில் இருமுவதால் தூக்கத்தில் ஏற்படும் தொந்தரவு

தயவுசெய்து நினைவில் கொள்ளவும்: ஆஸ்துமா அறிகுறிகள் நபருக்கு நபர் மாறுபடும். சிலருக்கு எல்லா அறிகுறிகளும் இருக்கும், சிலருக்கு இருமல் அல்லது வீசிங் மட்டுமே இருக்கும். உங்களுக்குள்ள அறிகுறிகள் அனைத்தையும் கவனித்து அவற்றைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து உங்கள் நிலைமையை சரியாக கணக்கிட அவருக்கு உதவுங்கள். சரியான சிகிச்சை மூலம் உங்கள் ஆஸ்துமா அறிகுறிகளை நீங்கள் கட்டுப்படுத்தலாம் என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலே திரும்புக












  ஆஸ்துமா பகுப்பாய்வு


ஆஸ்துமா எவ்வாறு கண்டறியப்படுகிறது?

உங்களுக்கோ, உங்களுக்கு விருப்பமானவர்களுக்கோ ஆஸ்துமா இருப்பது தெரியவந்தால், கண்டிப்பாக கவலைப்படத் தேவையில்லை. பயப்படவோ அல்லது உங்கள் வேலை அல்லது இடத்தை மாற்றவோ தேவையில்லை. ஒலிம்பிக் வீரர்கள், முக்கிய கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள் ஆகியோருக்கும் ஆஸ்துமா உள்ளது. அதேசமயத்தில் அதனால் அவர்களுக்கு தங்களின் வெற்றிகரமான வாழ்வை அனுபவிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைப்பதில் உங்கள் காரணிகளைப் புரிந்துகொள்வதானது முக்கியப் பங்கு வகிக்கிறது. உங்கள் நோய் அறிகுறிகளை கவனித்துவரவும். மேலும் உங்கள் மருந்தை ஒழுங்காக எடுக்கவும். ஆனால், முதலில் சரியாக நோயை டயக்னோஸ் செய்ய வேண்டும்.

இந்தியாவில், பல பெற்றோர்கள் அவர்களின் குழந்தைக்கு ஆஸ்துமா இருப்பதை ஏற்றுக்கொள்வதில்லை. ‘ஆஸ்துமா’ என்ற வார்த்தையைத் தவிர்த்து ‘வீசிங் மூச்சுப்பிரச்சனை’ அல்லது ‘அலர்ஜி சுவாசப்பிரச்சனை’ என்பதாகவே ஒப்புக்கொள்கிறார்கள். குழந்தைகளையும் கஷ்டப்படுத்தி, அவர்களுக்கு அவர்களே மனஅழுத்தத்தை உருவாக்கி ஒவ்வொரு மருத்துவராக அலைவார்கள். முதலிலேயே ஆஸ்துமா இருப்பது கண்டறியப்பட்டு சரியான நேரத்தில் சிகிச்சையளித்தால் அவர்களின் குழந்தை நார்மலான வாழ்வை விரைவிலேயே வாழத்தொடங்கலாம். குழந்தைகள் முதலில் குழந்தைகளாக இருக்கவேண்டும். ஆஸ்துமா உள்ள குழந்தைகள் சாதாரண குழந்தைகளைப் போலவே அனைத்தையும் செய்ய இயலும் - பள்ளிக்குச் செல்வது, விளையாடுவது மற்றும் ஐஸ் க்ரீம் சாப்பிடுவது உட்பட!

ஆஸ்துமாவை சுலபமாக கண்டறியலாம். ஆனால் சிலசமயம் தங்களுக்கு வரும் தொடர் இருமலை முக்கியமாக கருதாமல், சரியான நேரத்தில் சிகிச்சையளிக்காமல் இருமல் மருந்தை எடுக்கின்றனர். அடிக்கடி ஆஸ்துமா சில குடும்பங்களில் வரும். உங்களுக்கு அல்லது உங்கள் குழந்தைக்குள்ள ஆஸ்துமாவைக் கண்டறிவதில் மருத்துவருக்கு உதவ, மருத்துவர் கேட்கும் எல்லா கேள்விக்கும் சரியான பதிலளிக்கவும். கேள்விகள் உங்களின் நோய் அறிகுறிகள், குடும்ப வரலாறு, நீங்கள் எடுக்கும் மருந்து, உங்களுக்கு இருக்கும் அலர்ஜி ஆகியவைப் பற்றியதாக இருக்கும். இதையே சிகிச்சை வரலாறு என்கிறோம். சிகிச்சை வரலாற்றை வைத்தே பெரும்பாலான நோய் அறிகுறிகள் இருக்கும். மருத்துவர் சில உடற்சோதனைகள் செய்வார் மற்றும் பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) மற்றும் ஸ்பைரோமெட்ரி சோதனை எடுப்பது அவசியம்.




பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer)

பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) என்பது எளிய, கட்டுபடியாகக்கூடிய, கையடக்கமான சாதனம். இது சுவாசப் பிரச்சனை மற்றும் ஆஸ்துமாவைக் கண்டறிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் உதவுகிறது.

இரத்தக் கொதிப்பைக் கண்டறிய பீபி கருவி, சர்க்கரைக்கு குளுக்கோமீட்டர் போல ஆஸ்துமாவைக் கண்டறிய தெர்மாமீட்டர் போல பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) பயன்படுகிறது. நோயாளி, சாதனத்தின் வாய்ப்பகுதியில் ஊதவேண்டும். உங்கள் நுரையீரலின் சக்தியைப் பார்க்க இது அளவு எடுக்கும். பெரும்பாலான மருத்துவர்கள் இந்த சாதனத்தை அவர்களின் கிளினிக்கில் வைத்திருப்பர், நீங்கள் ஆஸ்துமாவைக் கணக்கிட உதவும் வகையில் இது பெரிய மெடிக்கல் ஷாப்களிலும் கிடைக்கும்.

உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால் அது குறைந்துள்ளதா அல்லது எந்த மாறுபாடும் இல்லாமல் இருக்கிறதா என நீங்கள் பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) கொண்டு பார்க்கலாம். உங்கள் வயது மற்றும் உயரத்தைப் பொறுத்து உங்களுக்கு பீக் ஃப்ளோ மீட்டரில் (சுவாச மீட்டர்) எந்த அளவு சாதாரணமானது அல்லது நல்லது என்பதை மருத்துவர் காட்டுவார். அளவு குறைந்தால் ஆஸ்துமா குறையவில்லை என்று அர்த்தம், மேலும் இது உங்களுக்கு கூடிய விரைவில் அல்லது சில நாட்களில் அட்டாக் வரலாம் என்பதை தெரிவிக்கிறது. உங்கள் மருந்தின் வீரியம் அல்லது உங்கள் மருந்தின் நேரத்தை அதிகரிப்பதற்கான முன்னெச்சரிக்கை இது. உங்களின் முந்தைய அளவை விட இந்த எண் அதிகமாக இருந்தால் உங்கள் ஆஸ்துமா கன்ட்ரோலில் உள்ளது மற்றும் நீங்கள் தேறி வருகிறீர்கள் என்பதைத் தெரிவிக்கிறது. பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) அளவு சாதாரணமாக இருந்தால் (ரேட்டிங்கை மருத்துவர் உங்களுக்கு அறிவிப்பார்), உங்கள் ஆஸ்துமா கன்ட்ரோலில் உள்ளதாக அர்த்தம்.





ஸ்பைரோமெட்ரி சோதனை

ஸ்பைரோமெட்ரி சோதனை என்பது அதிக உணர்திறனுடைய மற்றும் அதிநவீனமான சோதனை. இது ஆஸ்துமாவின் அறிகுறியை முன்கூட்டியே கண்டறியும். ஸ்பைரோமெட்ரி எவ்வளவு காற்றை உங்கள் நுரையீரல் தாங்கும் மற்றும் எவ்வளவு காற்றை உள்ளிழுத்து வெளித்தள்ளும் எனக் கண்டறிய உதவுகிறது. வேறுமாதிரி சொன்னால், இது உங்கள் நுரையீரலின் சக்தி மற்றும் சுவாசத்தின் கொள்ளவு போன்ற விவரங்களைத் துல்லியமாகத் தருகின்றது. லேப் அல்லது மருத்துவர் பார்க்கும் சோதனையில் ஈசிஜி சோதனையைப் போல உங்கள் அளவிற்கான வரைபடம் அச்சிடப்பட்டு வரும்.

பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer), ஸ்பைரோமெட்ரி இரண்டுமே உங்கள் ஆஸ்துமாவைக் கணக்கிட பயன்படுகிறது. மேலும் உங்கள் ஆஸ்துமா கன்ட்ரோலில் உள்ளதா எனப் பார்க்க உதவுகிறது.

இருப்பினும் இந்த சோதனை ஆறு வயதிற்கும் சிறிய குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. நீங்களும் உங்கள் மருத்துவரும் சேர்ந்து இதனைக் கண்டறிய பாடுபட வேண்டும். உங்கள் குடும்ப வரலாறு மற்றும் காரணிகளில் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் குழந்தையின் ஆஸ்துமா முதலிலேயே சரியாக கண்டறியப்படுமாறு பார்த்துக்கொள்ளவும். நீங்கள் உங்கள் மருத்துவரிடம் அடிக்கடி செல்வதன் மூலம், இருவரும் உங்கள் குழந்தையின் அறிக்கையை கண்காணித்து வரலாம்.

மேலே திரும்புக














  ஆஸ்துமா காரணிகள் மற்றும் அதை எவ்வாறு தவிர்ப்பது


காரணி என்பது நுரையீரல்களின் சுவாசப்பாதையில் எரிச்சலை உண்டாக்கி, ஆஸ்துமாவிற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும் பொருளாகும். ஒவ்வொருவரின் ஆஸ்துமாவும் வேறுவேறாக இருக்கும் மற்றும் உங்கள் ஆஸ்துமாவிற்கான காரணம் ஒன்றுக்கும் மேற்பட்டதாக இருக்கலாம். தூசித் துரும்புகள் மற்றும் விலங்குகளினால் ஏற்படும் சுகாதாரமின்மை மற்றும் பூக்களின் மகரந்தத் தூள் ஆகியவற்றில் ஏதாவது காரணமாக இருக்கலாம். உங்களுக்கு அந்நோய் எதனால் வந்தது என்ற காரணத்தை நீங்கள் அறிந்திருப்பது முக்கியமானது, அதனால் நீங்கள் அதைத் தவிர்க்கலாம். இதன்மூலம் ஆஸ்துமா கட்டுப்படுத்தப்பட்டு நீங்கள் சாதாரண வாழ்க்கையை அனுபவிக்க முடியும்.

மேலும் அந்நோய்க்கான குறிப்பிட்ட காரணத்தை அறிதல் கடினமானது. ஆனால் சிலசமயம் சில அறிகுறிகள் கிடைக்கலாம். எடுத்துக்காட்டாக: உங்கள் நோய் அறிகுறிகள் பூனை, நாய் அல்லது பறவையிடமிருந்து சில நிமிடங்களில் தொடங்குவது, புகை அல்லது நெருப்பினால் காற்று மாசுபட்டிருக்கும்போது நோய் அறிகுறி தொடங்குவது போன்றவை இவற்றில் சிலவாகும். . காற்றில் உள்ள சில பொருட்கள் உங்களுக்கு அலர்ஜியை(Allergy) ஏற்படுத்தி உங்கள் சுவாசப்பாதையில் எரிச்சல் உண்டாகி உங்களுக்கு பாதிப்பை உருவாக்கலாம்.

சுற்றுச்சூழலில் இருக்கும் தூசு, புகை, வேலைப் பார்க்குமிடத்தில் இருக்கும் கெமிக்கல் (நிலக்கரி, சிமென்ட், பெயின்ட், ஆஸ்பெஸ்டாஸ், சுரங்கங்கள், சர்க்கரை, பூச்சிக்கொல்லி போன்ற சில தொழிற்சாலைகளில்) பொருட்கள், காற்று மாசுபாடு மற்றும் பூக்களின் மகரந்தம் போன்ற சுவாசத்தின் மூலம் உள்ளே செல்லும் பொருட்கள் சுவாசப்பாதையில் அலர்ஜி(Allergy) அல்லது எரிச்சலைத் தூண்டி ஆஸ்துமா ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளாக உள்ளன. நெரிசலான பகுதி, ஈரமான சுவர் மற்றும் சமைக்கும்போது விறகு எரிக்கும் புகை கொண்ட பகுதியில் வாழும் மக்களுக்கு இதன் பாதிப்பு அதிக அளவில் இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

சில பொதுவான நோய் தூண்டும் காரணிகள் மற்றும் ஆஸ்துமா அட்டாக்கை தவிர்ப்பதற்கான உதவிக் குறிப்புகள் இங்கே.

House dust mites
வீட்டு தூசி ஒட்டுண்ணிகள்
Pets
செல்லப் பிராணிகள்
Smoking and air pollutants
புகைப்பிடித்தல் மற்றும் காற்று மாசுபாடுகள்
Your occupation / workplace
உங்கள் வேலை/வேலை செய்யுமிடம்
Colds and viruses
ஜலதோஷம் மற்றும் வைரஸ்கள்
Emotions
உணர்ச்சிகள்
Exercise
உடற்பயிற்சி
Food
உணவு
Hormones
ஹார்மோன்கள்
Medicines
மருந்துகள்
Molds, fungus and pollen
மரு, பூஞ்சை மற்றும் பூவின் மகரந்தம்
Weather
வானிலை
Mosquito coils, room fresheners, cleaning products
கொசுவர்த்தி, ரூம் ஃப்ரெஷ்னர், சுத்தம் செய்ய உதவும் தயாரிப்புகள்
 






வீட்டு தூசி ஒட்டுண்ணிகள்:
தூசி ஒட்டுண்ணிகள் மிகப் பொதுவான காரணியாகும். சிறிய உயிர்களான இவை கார்பெட்கள், பாய்கள், சோபாக்கள், திரைகள் மற்றும் மிருதுவான பொம்மைகள் போன்றவற்றில் வாழும்.

உதவிக் குறிப்புகள்: கார்பெட்களை முடிந்தவரை தவிர்க்கவும் மற்றும் அதனை யாரையாவது வைத்து அடிக்கடி சுத்தப்படுத்தவும். உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால் வேறுயாரையாவது வைத்து சுத்தப்படுத்தவும் அல்லது நீங்கள் வீட்டில் இல்லாதபோது சுத்தப்படுத்தச் சொல்லவும். உங்கள் குழந்தைக்கு ஆஸ்துமா இருந்தால், குழந்தைப் பள்ளிக்குச் சென்றுள்ளபோது வீட்டை சுத்தப்படுத்தவும்.
படுக்கையிலிருந்து எல்லா மிருதுவான பொம்மைகளையும் அகற்றவும்.

மிருதுவான பொம்மைகளை இரு வாரத்திற்கு ஒருமுறை கழுவி சூரியவெளிச்சத்தில் உலர்த்தவும்.

House dust mites Pets Smoking and air pollutants Your occupation / workplace Colds and viruses Emotions Exercise Food Hormones Medicines Molds, fungus and pollen Weather Mosquito coils, room fresheners, cleaning products
மேலே திரும்புக
செல்லப் பிராணிகள்:
செல்லப் பிராணிகள் ஆஸ்துமா நோய் அறிகுறிகளுக்கான பொதுவான காரணமாகும். அவற்றின் முடி, இறக்கைகள், எச்சில், தோல், செதில் அல்லது சிறுநீர் ஆகியவை ஆஸ்துமா நோயை மேலும் அதிகரிக்கும் தூண்டுதல்களாகும்.

உதவிக் குறிப்புகள்:முடி மற்றும் இறகுள்ள செல்லப்பிராணிகளை தவிர்க்கவும். நீங்கள் முக்கியமாக வசிக்கும் மற்றும் உறங்கும் இடங்களில் அவற்றை தவிர்க்கவும்.

செல்லப்பிராணி கண்டிப்பாக வேண்டுமென்றால் மீன் வளர்க்கவும்.

House dust mites Pets Smoking and air pollutants Your occupation / workplace Colds and viruses Emotions Exercise Food Hormones Medicines Molds, fungus and pollen Weather Mosquito coils, room fresheners, cleaning products
மேலே திரும்புக
புகைப்பிடித்தல் மற்றும் காற்று மாசுபாடுகள்:
அதிக நேரம், நாம் மாசுபட்ட காற்றை சுவாசித்தால் அது ஆஸ்துமா நோய்க்குறிகளைத் தூண்டிவிட காரணமாக இருக்கும். சிகரெட் பிடித்தல், காரின் புகை, நெருப்பிலிருந்து வரும் புகை, சமைக்கும்போது விறகை எரிப்பதனால் வரும் புகை ஆகியவற்றில் பல பாதிக்கும் பொருட்கள் இருப்பதால் அவை சுவாசப்பாதைகளை எரிச்சலூட்டுகின்றன.

உதவிக் குறிப்புகள்:உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், புகைப்பிடித்தலை நிறுத்தவும். அது உங்கள் உடல்நலத்தைப் பாதிக்கும்.
புகைப்பிடிப்பவரை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளவும், அந்தப் புகையை சுவாசிப்பதும் உங்களுக்கு நல்லதல்ல. (அதாவது நீங்களும் புகைப் பிடித்த மாதிரிதான் இருக்கும்)
உங்கள் குடும்பத்தில் யாரேனும் புகைப்பிடித்தால் அவர்களை வெளியில் சென்று புகை பிடிக்கச்சொல்லவும். ஏனென்றால் சிகிரெட் புகையானது வீட்டிலுள்ள திரைகள், கார்பெட்கள் மற்றும் பலபொருட்களில் அதிக நேரம் படிந்திருக்கும்.

அதிக மாசு இருக்கும் என்பதால் நெரிசல் மிகுந்த நேரத்தில் பயணம் செய்வதைத் தடுக்கவும்.

House dust mites Pets Smoking and air pollutants Your occupation / workplace Colds and viruses Emotions Exercise Food Hormones Medicines Molds, fungus and pollen Weather Mosquito coils, room fresheners, cleaning products
மேலே திரும்புக
உங்கள் வேலை/வேலை செய்யுமிடம்:
நீங்கள் வேலைசெய்யும் இடம் மற்றும் வேலை போன்றவை சில நேரங்களில் காரணிகளாக அமையலாம். நகை வியாபாரம், படம் வரைதல், பூச்சிமருந்து, குவாரி, ப்ரின்டிங் மற்றும் ப்ளாஸ்டிக் நிறுவனம், சிப்ஸ் மற்றும் பேக்கர்ஸ், சால்டெரர்ஸ் மற்றும் மெட்டல் ஒர்க்கர், நுரைவேலை மற்றும் ஸ்ப்ரே பெயின்டர், முடி வெட்டுபவர் மற்றும் கார்பென்டர் போன்றோர் அதிக அளவில் ஆஸ்துமாவால் பாதிக்கப்படலாம். இருப்பினும், நுரையீரலில் எரிச்சலை உருவாக்குவது சில கெமிக்கல் பொருட்களின்(ஆசிட், பிளீச்சிங் பவுடர் மற்றும் டெட்டால்) அல்லது குறிப்பிட்ட பொருளின் வாசனையே ஆகும்.

உதவிக் குறிப்புகள்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், உங்கள் கன்ட்ரோலர்(Controller) மருந்தை சரியாக மற்றும் தொடர்ந்து எடுக்கவும். மேலும் மருத்துவரை அணுகவும். அவரே ஆலோசனைக்கு சிறந்த நபர்.

House dust mites Pets Smoking and air pollutants Your occupation / workplace Colds and viruses Emotions Exercise Food Hormones Medicines Molds, fungus and pollen Weather Mosquito coils, room fresheners, cleaning products
மேலே திரும்புக
ஜலதோஷம் மற்றும் வைரஸ்கள்:
ஆஸ்துமாவிற்கு ஜலதோஷம் மற்றும் கிருமி பாதிப்பு முக்கிய காரணியாகும். எல்லோரும் ஏதேனும் ஒரு நேரம் ஜலதோஷத்தால் அவதிப்படுவர், அவற்றை முற்றிலும் தவிர்ப்பது இயலாத காரியம்.

உதவிக் குறிப்புகள்: சத்துள்ள உணவை சாப்பிடவும், சரியான உடல் எடையை பராமரிக்கவும். உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும். உங்கள் முகத்தை விரலால் தொடுவதைத் தவிர்க்கவும். விரல் நகங்களை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும் அல்லது வெட்ட வேண்டும்.

House dust mites Pets Smoking and air pollutants Your occupation / workplace Colds and viruses Emotions Exercise Food Hormones Medicines Molds, fungus and pollen Weather Mosquito coils, room fresheners, cleaning products
மேலே திரும்புக
உணர்ச்சிகள்:
தீவிர உணர்ச்சிகள், மனஅழுத்தம் அல்லது அதிகமாக சிரித்தலும் ஆஸ்துமாவிற்கு காரணமாகலாம்.

உதவிக் குறிப்புகள்:உங்கள் மனஅழுத்தத்திலிருந்து விடுபட்டு இயல்பான வாழ்க்கை வாழவும்.

House dust mites Pets Smoking and air pollutants Your occupation / workplace Colds and viruses Emotions Exercise Food Hormones Medicines Molds, fungus and pollen Weather Mosquito coils, room fresheners, cleaning products
மேலே திரும்புக
உடற்பயிற்சி:
உடற்பயிற்சி ஆஸ்துமா உள்ளவர்கள் உட்பட அனைவருக்கும் நல்லது. சிலர் உடற்பயிற்சி செய்யும்போது அல்லது அதற்குப்பிறகு அதிகமாக மூச்சுத் திணறுவர். உங்கள் ஆஸ்துமா கட்டுப்பாட்டில் இருந்தால் உடற்பயிற்சி செய்வதில் பிரச்சனையில்லை. அறிகுறி அதிகமானால் தயவுசெய்து உங்கள் மருத்துவரை அணுகவும்.

உதவிக் குறிப்புகள்:ஆஸ்துமாவிற்கான நல்ல உடற்பயிற்சி யோகா, நீச்சல், ஹாக்கி, கிரிக்கெட், கால்பந்து போன்றவையாகும். இடையில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கலாம். தொடர்ந்து ஓடத்தேவையில்லை என்பதால் இந்த விளையாட்டுகளில் பங்குபெறலாம்.

உடற்பயிற்சி செய்யும்முன் அல்லது உடற்பயிற்சி கூடத்தில்ள சேரும்முன் உங்கள் மருத்துவரை ஆலோசிக்கவும். உங்கள் உடல் பயிற்சியாளர் அல்லது உங்கள் பள்ளி விளையாட்டு பயிற்சியாளரிடம் உங்களுக்கு ஆஸ்துமா இருப்பதையும் இன்ஹேலர்(Inhaler) சிகிச்சை பற்றியும் தெரிவிக்கவும். உங்கள் மருந்தை எப்பொழுது, எப்படி பயன்படுத்துவது என்ற குறிப்புடன் உங்களுடனேயே வைத்திருக்கவும். மேலும் கூடுதல் அவசர உதவி மருந்தை(Reliever) வைத்திருக்கவும்.

House dust mites Pets Smoking and air pollutants Your occupation / workplace Colds and viruses Emotions Exercise Food Hormones Medicines Molds, fungus and pollen Weather Mosquito coils, room fresheners, cleaning products
மேலே திரும்புக
உணவு:
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் கட்டுப்பாடான உணவுப் பழக்கத்தைக் கையாளத் தேவையில்லை. ஆனால் கொட்டைகள், முட்டை, மீன், பால், ஷெல் மீன், ஈஸ்ட் தயாரிப்புகள், நிறமூட்டிய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு, ஒய்ன், நுரைமிக்க குளிர்பானங்கள், ஏற்கனவே தயாரித்த உணவு போன்றவற்றால் சிலருக்கு அலர்ஜி(Allergy) ஏற்படும்...

உதவிக் குறிப்புகள்: பதப்படுத்தப்பட்ட மற்றும் செயற்கையாக பேக்செய்த உணவைத் தவிர்க்கவும். மேலும் உங்களுக்கு கொட்டைகள், முட்டை, பால், ஷெல் மீன் மற்றும் ஈஸ்ட் தயாரிப்புக்களால் அலர்ஜி(Allergy) ஏற்படுமா என்று சோதனை செய்யவும். பேக் செய்த உணவில் உள்ள பொருட்களின் சிறிய அச்சுகளைப் படிக்கவும்.

அலர்ஜி(Allergy) சோதனைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

House dust mites Pets Smoking and air pollutants Your occupation / workplace Colds and viruses Emotions Exercise Food Hormones Medicines Molds, fungus and pollen Weather Mosquito coils, room fresheners, cleaning products
மேலே திரும்புக
ஹார்மோன்கள்:
ஆம், ஹார்மோன்கள் காரணமாக ஆஸ்துமா தூண்டப்படலாம், குறிப்பாக பெண்களுக்கு இப்பிரச்சனை அதிகம். சில பெண்களுக்கு ஆஸ்துமா அறிகுறிகள் வயதுக்கு வரும்போதும், மாதவிடாய்க்கு முன்பும், கருவுற்ற காலத்திலும், மாதவிடாய் நிறுத்த காலத்திலும் வரும்.

உதவிக் குறிப்புகள்: ஹார்மோன்கள்தான் உங்கள் நோய் அறிகுறியைத் தூண்டியது என்று சந்தேகப்பட்டால் உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

House dust mites Pets Smoking and air pollutants Your occupation / workplace Colds and viruses Emotions Exercise Food Hormones Medicines Molds, fungus and pollen Weather Mosquito coils, room fresheners, cleaning products
மேலே திரும்புக
மருந்துகள்:
சில மருந்துகளும் நோய்க்குறிக்குக் காரணமாக இருக்கலாம். ஃப்ளூ, இதயத்தில் பிரச்சனை, க்ளுகோமா போன்றவற்றுக்கான மருந்துகள் இவற்றில் சிலவாகும்.

உதவிக் குறிப்புகள்: நீங்கள் எடுக்கும் மருந்தைப் பற்றி மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

House dust mites Pets Smoking and air pollutants Your occupation / workplace Colds and viruses Emotions Exercise Food Hormones Medicines Molds, fungus and pollen Weather Mosquito coils, room fresheners, cleaning products
மேலே திரும்புக
மரு, பூஞ்சை மற்றும் பூவின் மகரந்தம்:
பூக்களின் மகரந்தத் தூள் நோய்க்குறிக்கு காரணமாக இருக்கலாம். நீங்கள் ஈரமான சுவர், துணி, குளியலறை மற்றும் தோட்டத்தில் உதிர்ந்துள்ள சருகுகள் ஆகியவற்றில் பூஞ்சைகளைக் காணலாம்.

உதவிக் குறிப்புகள்: உங்கள் வீட்டை காற்றோட்டமாக வைத்திருக்கவும். உங்கள் வீட்டு சுவர் ஈரப்பதமாக இல்லை என்பதை உறுதிசெய்யவும்.

House dust mites Pets Smoking and air pollutants Your occupation / workplace Colds and viruses Emotions Exercise Food Hormones Medicines Molds, fungus and pollen Weather Mosquito coils, room fresheners, cleaning products
மேலே திரும்புக
வானிலை:
வெப்பநிலையில் திடீர் மாற்றம், காற்று வீசும் நாட்கள், வெப்பமான ஈரப்பதமான நாட்களும் சிலருக்கு நோயைத் தூண்டிவிடக்கூடும்.

உதவிக் குறிப்புகள்: பனிமூட்டமாக இருக்கும்போது அதிகாலை நடைப்பயிற்சி செய்யவேண்டாம். காற்றுவீசினால் கைக்குட்டையைக் கொண்டு உங்கள் முகத்தை மூடவும். AC ரூமிலிருந்து அல்லது வெப்ப ஈரப்பத அதிக வெப்பமுடைய வெளிப்புறத்திலிருந்து வெப்பமான பகுதிக்கு உள்ளே அல்லது வெளியே செல்லவேண்டாம்.

House dust mites Pets Smoking and air pollutants Your occupation / workplace Colds and viruses Emotions Exercise Food Hormones Medicines Molds, fungus and pollen Weather Mosquito coils, room fresheners, cleaning products
மேலே திரும்புக
கொசுவர்த்தி, ரூம் ஃப்ரெஷ்னர், சுத்தம் செய்ய உதவும் தயாரிப்புகள்:
இந்த தயாரிப்புகளில் உள்ள கெமிக்கல் சிலருக்கு காரணியாக அமையலாம். சொல்லப்போனால், பூனேவிலுள்ள செஸ்ட் ரிசர்ச் ஃபௌன்டேஷன் செய்த முக்கிய ஆய்வின்படி, ஒரு கொசுவர்த்தியானது 75 – 137 சிகரெட்டுகள் காற்றில் ஏற்படுத்தும் மாசிற்கு சமமானது!

உதவிக் குறிப்புகள்: கொசுவைத் தவிர்க்க கொசு வலைகளை உங்கள் ஜன்னலில் பயன்படுத்தவும். அதிக மணம் வீசக்கூடிய க்ளீனிங் பொருட்களைத் தவிர்க்கவும். மேலும் உங்கள் அறையில் ரூம் ஃப்ரெஷ்னர் பயன்படுத்துவதற்கு பதிலாக அறையை காற்றோட்டமாக வைத்திருக்கவும்.

House dust mites Pets Smoking and air pollutants Your occupation / workplace Colds and viruses Emotions Exercise Food Hormones Medicines Molds, fungus and pollen Weather Mosquito coils, room fresheners, cleaning products
மேலே திரும்புக

தயவுசெய்து நினைவில் நிறுத்தவேண்டிய மதிப்புவாய்ந்த பழமொழி என்னவென்றால், ‘வருமுன் காப்பதே சிறந்தது’ என்பதாகும். உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், அதன் காரணங்களைத் தொடர்ந்து கவனித்து அவற்றைத் தவிர்க்கவும். உங்கள் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை ஆகியவற்றைப் பற்றி எப்பொழுதும் மருத்துவரை அணுகி பேசவும்.










  இருமலைப் பற்றி மேலும் அறிக


நீங்கள் இருமும்போது, உங்கள் நுரையீரலில் உள்ள தூசு மற்றும் தேவையற்றவை அகற்றப்படுகிறது. உங்கள் நுரையீரலில் கிருமித் தொற்றை தடுக்க இயற்கையான வழியில் இருமல் உதவுகிறது.

சிலநேரம் இருமல் பாதிப்பையும் ஏற்படுத்தலாம். இருமல் உங்களை களைப்பாக்கலாம். மேலும் உங்கள் உறக்கத்தைப் பாதிக்கலாம். இருமல் அதிகமாகவும் தொடர்ந்தும் இருந்தால், உங்கள் நுரையீரலில் பிரச்சனை இருப்பதைக் குறிக்கிறது.

அதன் கால அளவைப் பொறுத்து இருமல் வகை பிரிக்கப்படுகிறது. உங்கள் இருமல் மூன்று வாரத்திற்கும் குறைவாக இருந்தால் அது தற்காலிகமான இருமலாக இருக்கும். உங்கள் இருமல் 8 வாரத்திற்கும் மேலாக இருந்தால், அது தொடர் இருமல்.

தற்காலிக இருமலுக்கான காரணங்கள்:
மேல் சுவாசக்குழாயில் கிருமி தொற்று (ஜலதோஷம், காய்ச்சல்)
சுவாசப்பாதையில் இருக்கும் பிற சிக்கல்கள்

தொடர் அல்லது விடாப்பிடியான இருமலின் காரணங்கள்:
ஆஸ்துமா
ஆஸ்துமா என்பது முக்கியமாக குழந்தைகளுக்கு தொடர் இருமலைத் தோற்றுவிக்கும். ஆஸ்துமா தொடர்பான இருமலானது விடாமலோ, தொடர்ந்தோ அல்லது காலநிலைக்கு ஏற்பவோ வரலாம். மேல் சுவாசக்குழாய் அலர்ஜியால்(Allergy) ஏற்படலாம் அல்லது தூசி, செல்லப்பிராணிகள், புகைப்பிடித்தல் மற்றும் காற்று மாசுபாடு, ஈரப்பதம் போன்ற பல காரணங்களால் இன்னும் மோசமாகலாம்.

நாசியழற்சி (மூக்குஅரிப்பு)
நாசி (மூக்கு) சுவாசப் பாதையின் தொடர்ச்சி என்பதால், ஆஸ்துமா உள்ள பல நோயாளிகளுக்கு நாசியழற்சி இருக்கும். பொதுவாக, முதலில் மூக்கும், பிறகு நுரையீரலும் பாதிக்கப்படும். நாசி அழற்சி என்பது ஒருவர் தூசு, முடி அல்லது பூவின் மகரந்தத் தூள் போன்ற அலர்ஜியான(Allergy) ஒரு பொருளை சுவாசிப்பதால் தோன்றும் அறிகுறிகளின் தொகுப்பாகும். இந்த அறிகுறிகள் காலநிலைக்கேற் பவோ அல்லது வருடத்தில் எல்லா நாட்களுமோ இருக்கும்.

நோய் அறிகுறிகளாவன:
• மூக்கு ஒழுகுதல் (நாசியிலிருந்து தொடர்ந்து நீர் வழிதல்)
• தும்மல்
• மூக்கடைப்பு
• மூக்குஅரிப்பு (நாசி, கண்கள் அல்லது வாயின் மேல்பகுதியில் அரிப்பு)

புரையேறுதல் (அதாவது மூக்கிலிருந்து வடியும் நீரானது தொண்டைக்கு இறங்குதல்) எரிச்சலை உருவாக்கி இருமலுக்கும் காரணமாகும்.

நெஞ்சு எரிச்சல்
அதாவது, வயிற்றிலிருந்து அமிலம் பின்னோக்கி(பின்னோட்டங்கள்) உணவுக் குழாயில்(ஓசோஃபாகஸ்) வழிவதை நெஞ்சு எரிச்சல் என்கிறோம். இது ஒரு காரணியாக இருந்து மேலும் தொடர் எரிச்சல் மற்றும் இருமலுக்கு வழிவகுக்கும்.
தொற்று நோய்கள்
நீடித்த இருமல் காசநோய்(TB) மற்றும் பிற தொடர்ந்த நுரையீரல் நோய்களுடனும், நுரையீரல் தொற்றுகளுடனும் இணைந்திருக்கக்கூடும். இது நெஞ்சு வலி, நிம்மதியில்லா தூக்கம், கரகரப்பான குரல் மற்றும் சிலவேளைகளில் மூக்கடைப்பு, வாந்தி மற்றும் அடக்கமுடியாத சிறுநீர் கழிப்பு ஆகியவற்றுடன் இணைந்திருக்கும்.


குறிப்பு: பல இருமல் சிரப்புகளில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்கள் தற்காலிகமாக இருமலைக் குணப்படுத்தி, நுரையீரல் பிரச்சனையை மறைக்கக்கூடும் என்பதை நினைவில் கொள்ளவும். அதனால் உங்களுக்கு 3 வாரங்களுக்கும் அதிகமாக தொடர்ந்து இருமல் இருந்தால், சரியான பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.

மேலே திரும்புக