Home
  Breathe Free
இது இருமலா அல்லது ஆஸ்துமாவா?
சிகிச்சைமுறை &
கட்டுப்பாடு
சந்தேகங்களும்,
தீர்வுகளும்
மூக்கழற்சி
அலர்ஜி
COPD

சிகிச்சைமுறை & கட்டுப்பாடு

 
அறிமுகம்  
ஏன் இன்ஹேலர்கள் (inhaler) சிறந்தவை?  
இன்ஹேலர்களில் (inhaler) பயன்படுத்தும் மருந்துகளின் வகைகள்  
இன்ஹேலரை (inhaler) எவ்வாறு பயன்படுத்துவது  
ஆஸ்துமாவை எவ்வாறு கன்ட்ரோலில் வைப்பது  
ஆஸ்துமா அட்டாக்கின்போது என்ன செய்ய வேண்டும்  
தனிச் சூழ்நிலையில் ஆஸ்துமா  

  அறிமுகம்


நல்ல விஷயம் என்னவென்றால், ஆஸ்துமாவை குணப்படுத்த இயலாவிட்டாலும் அதனைக் கட்டுப்படுத்தி வைக்கலாம். நவீன மருந்துகள் மற்றும் இன்ஹேலர்ஸ் (inhalers) போன்றவை மக்களை நார்மலான, ஆரோக்ய வாழ்வை வாழ வழிவகுக்கின்றன. சரியான சிகிச்சை மூலம் நீங்களும் நல்ல நிறைவான வாழ்க்கையை வாழலாம்.

ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்க முதலில் உங்கள் மருத்துவரை அணுகி என்ன செய்யவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, மருத்துவர் காரணிகளைப் பற்றி உங்களுக்கு ஆலோசனைக் கூறுவார். அதாவது உங்கள் நுரையீரலின் சுவாசப்பாதையை பாதிக்கும் பொருட்களைப் பற்றி.

உங்கள் மருத்துவர் ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்க மருந்தை பரிந்துரைப்பார், அதேசமயம் உங்கள் சிகிச்சை வெற்றிகரமாக இருக்க நீங்கள் அவருடன் ஒத்துழைக்க வேண்டும். ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்க உங்கள் மருத்துவர் அளித்த மருந்துகளை சரியாக எடுக்கவேண்டும். உங்கள் மருத்துவர் அவசரநிலையில் என்ன செய்யவேண்டும் என்பதையும் கூறுவார்.

தகவல்களை நீங்களே படிக்கவும் – எந்தெந்த காரணிகளை தவிர்ப்பது, பிற வகை மருந்துகளை விட இன்ஹேலர்களில் (inhaler) உள்ள நன்மைகள், அட்டாக்கின்போது என்ன செய்யவேண்டும் மற்றும் உங்கள் ஆஸ்துமாவை எப்படி கன்ட்ரோலில் வைப்பது.
















  ஏன் இன்ஹேலர்கள் (inhaler) சிறந்தவை?


இன்ஹேலர்கள் (inhaler) மூலம் மருந்தை எடுத்தலின் பயன்கள் தற்காலத்தில் மட்டும் உலகம் புரிந்துகொள்ளவில்லை. 2000 வருடங்களுக்கு முன்னால் பண்டைய எகிப்து, க்ரீஸ் மற்றும் இந்தியாவிலும் மக்கள் மருத்துவ மூலிகைகள் மற்றும் இலைகளை நுகர்வதால், மூச்சுத்திணறல் மற்றும் ஆஸ்துமாவிலிருந்து ஆறுதல் கிடைக்கும் என்பதைப் புரிந்து வாழ்ந்தனர். பல நூற்றாண்டுகளுக்கு பின்பு, இன்ஹேலர்கள் (inhaler) உருவாக்கப்பட்டன அது இப்பொழுது மேம்பட்டு மிக சக்திவாய்ந்ததாகவும் இருக்கிறது.

இன்று ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட அனைவரும் இன்ஹேலரைப் (inhaler) பயன்படுத்துவது அவர்களை நார்மலாகவும், தினசரி வேலைகளிலும் ஈடுபட உதவுகிறது. ஆஸ்துமா இன்ஹேலர்கள் (inhaler), மக்களுக்கு ஆஸ்துமா இருந்தும் நிறைவான வாழ்வை வாழ வழிவகுக்கிறது.

உலகம் முழுவதும் மாத்திரை அல்லது சிரப்புகளை விடச் சிறந்தது, ஆஸ்துமாவிற்கு இன்ஹேலர்தான் (inhaler) என்பது நிரூபிக்கப்பட்டது. ஏன்? உங்கள் கண்ணில் பிரச்சனையிருந்தால் உங்கள் கண்களுக்கு நீங்கள் ட்ராப்ஸ் இடுவீர்கள். உங்கள் தோலில் பிரச்சனையிருந்தால் அதன்மேல் ஆயின்ட்மென்ட் அல்லது க்ரீமை பயன்படுத்துவீர்கள். நீங்கள் மாத்திரையையோ அல்லது சிரப்பையோ விழுங்க மாட்டீர்கள். எங்கு தேவையோ அங்கு மட்டுமே மருந்தைப் பயன்படுத்துவீர். அதேபோல், ஆஸ்துமாவிற்கு நீங்கள் வாய்வழியாக இன்ஹேலர் (inhaler) மூலம் மருந்தை உள்ளிழுக்கவோ அல்லது சுவாசிக்கவோ செய்யுங்கள்.

இது மிகவும் நல்லது. ஏனென்றால் மருந்தானது எங்கு தேவையோ அங்கு நேரடியாக அதாவது நுரையீரலின் சுவாசப்பாதையில் விரைவாக அடைகிறது.

இதனை ஆஸ்துமா மாத்திரைகள் மற்றும் சிரப்புகளுடன் ஒப்பிடவும். உங்களுக்கு முன்பே தெரிந்ததுபோல் அதை விழுங்கவேண்டும். ஆனால் மாத்திரை அல்லது சிரப்பிற்கு மருந்து வயிற்றிலிருந்து ரத்தத்திற்கும், பின் அங்கிருந்து நுரையீரலுக்கும் செல்ல அதிக நேரம் எடுக்கும் என்பது உங்களுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். இது மிகவும் மெதுவானது. மேலும் நோயாளிக்கு நிவாரணம் கிடைக்க அதிக நேரமெடுக்கும். சில மருந்துகள், தேவைப்படாதபோது வயிற்றிலே தங்கலாம் அது சில பக்க விளைவுகளை உருவாக்கும்.

அதேசமயம், மாத்திரைகள் அல்லது சிரப்புகள் அதிக டோஸ் தேவைப்படும். ஏனென்றால் எல்லாமே நுரையீரலை சென்றடையாது. இது கூடுதல் பக்கவிளைவை ஏற்படுத்தும். நீங்கள் மருந்தை இன்ஹேலர் (inhaler)மூலம் எடுக்கும்போது உங்கள் நுரையீரலில் 40 மடங்கு வேகமாகவும் வயிற்றுக்கு செல்லாமலும் இருப்பதால் குறைந்த பக்கவிளைவைக் கொண்டிருக்கிறது. உங்களுக்கு நீங்களே இந்த கேள்வியைக் கேட்பது அவசியம்: “மருந்து எனது நுரையீரலுக்கு மட்டும் தேவைப்படும் பொழுது ஏன் மற்ற பாகங்களுக்கு செல்லவேண்டும்?”

USA மற்றும் UK போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில், மாத்திரை மற்றும் சிரப்புகளுக்குப் பதிலாக, ஆஸ்துமாவிற்கான முதன்மை சிகிச்சை பொருளாக, இன்ஹேலர் (inhaler) இடம் பிடித்துள்ளது. இது சிறந்த, பாதுகாப்பான ஆஸ்துமா கட்டுப்பாட்டு வழியாகும்.

மதிப்புவாய்ந்த அறிவியல் மற்றும் மருத்துவக் கழகங்களின் முழு மருத்துவ ஆய்வு மற்றும் ஆராய்ச்சிகள் இன்ஹேலர்கள் (inhaler) மிகவும் பாதுகாப்பானது என்று கூறுகின்றன. பக்கவிளைவுகள் இருந்தாலும் அது மிகவும் சிறிய அளவு என்பதால் சுலபமாக அதைக் குறைக்கலாம். நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தாலோ அல்லது உங்களுக்குப் பக்கவிளைவுகள் இருந்தாலோ உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

ஆஸ்துமா இன்ஹேலர்களின் (inhaler) விலை கட்டுபடியாகக்கூடியதே. சிறிய தொகையில் தினமும் நிவாரணம் பெறலாம். நோய் அட்டாக்கையும் சிகிச்சை கட்டணத்தையும் குறைக்கலாம். இன்ஹேலர்களைப் (inhaler) பயன்படுத்துபவர்கள் வேலை, பள்ளி மற்றும் கல்லூரிக்கு சரிவர செல்கின்றனர் என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

இன்ஹேலர் (inhaler) மூலம் கன்ட்ரோலர் (Controller) மற்றும் ரிலீவர் (Reliever) என்ற இருவகை மருந்துகள் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு, இன்ஹேலர் (inhaler) மருந்துகளைப் பற்றி தொடர்ந்து படிக்கவும். உங்கள் ஆஸ்துமாவிற்கான சிறந்த சிகிச்சைக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.

மேலே திரும்புக












  இன்ஹேலர்களில் (inhaler) பயன்படுத்தும் மருந்துகளின் வகைகள்


மாத்திரைகள், சிரப்புகள் மற்றும் இன்னும் பிற மருந்துகளையும் விட பாதுகாப்பானதாகவும் சிறந்ததாகவும் இன்ஹேலர் (inhaler) ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்கும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆஸ்துமாவிற்கு இரண்டு வகை இன்ஹேலர் (inhaler) மருந்துகள் உள்ளன:


இன்ஹேலருடன் (inhaler) பயன்படுத்தும்படி இந்த மருந்துகள் உள்ளன, மேலும் அட்டாக்கைத் தடுக்க அவற்றைத் தொடர்ந்து எடுக்கவேண்டும். சில சமயங்களில் இவை வருமுன் காப்பவை என்று அழைக்கப்படுகின்றன. உலகம் முழுவதும், கன்ட்ரோலர் (Controller) மருந்துகள் மட்டுமே உங்கள் ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைப்பதற்கு உள்ள நிரூபிக்கப்பட்ட வழி.

இந்த மருந்துகள் உடனடி நிவாரணம் அளிக்காவிட்டாலும், தொடர்ந்து பயன்படுத்தும்போது உங்கள் ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்க உதவுகிறது. உலகளவில் ஏற்கப்பட்ட சிகிச்சை வழிகாட்டியின்படி தொடர் அறிகுறிகள் இருப்பவர்கள் வீக்கத்தைக் கன்ட்ரோலில் வைக்க, நோய்க்குறி மற்றும் அட்டாக்கிலிருந்துப் பாதுகாக்க, அதிக நாள் எடுக்கும் மருந்தை தினசரி உபயோகப்படுத்த வேண்டும்.

நீங்கள் உங்கள் கன்ட்ரோலரைத் தொடர்ந்தால் உங்களுக்கு ஆஸ்துமா அட்டாக் வராது. இருப்பினும் உங்களுக்கு அட்டாக் இருந்தால் உங்கள் ரிலீவர் (Reliever) மருந்தை உடனடியாக எடுக்கவும். முக்கியமாக நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், உங்கள் கன்ட்ரோலரை தொடர்ந்து பயன்படுத்துதல் ரிலீவரின் தேவையைக் குறைக்கும், நீங்கள் அதை அறிதாகவே பயன்படுத்தும்படி இருக்கும். ஆனால் நீங்கள் உங்கள் கன்ட்ரோலரை தினமும் பயன்படுத்தும்படி ஆக்கும். அதனால், பல்லில் பிரச்சனையின்றி இருக்க தினமும் பல் துலக்குவதைப் போல் அதை ஒரு பழக்கமாக வைத்திருங்கள். அதேபோல் உங்கள் ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்க நீங்கள் கண்டிப்பாக கன்ட்ரோலரைப் பயன்படுத்தவேண்டும்.

கன்ட்ரோலரைப் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை

தினமும் ஒரேநேரத்தில் கன்ட்ரோலரைப் பயன்படுத்தவும். நீங்கள் நாளுக்கு இருமுறை எடுக்கவேண்டி இருந்தால் உங்களுக்கு சுலபமான நேரத்தில் அதைப் பயன்படுத்தவும்.
வீட்டில் ஒருமுறை மற்றும் அலுவலகத்தில் ஒருமுறை என்று நீங்கள் உங்கள் மருந்தை வெவ்வேறு இடங்களில் எடுத்தால், நீங்கள் ஒரு கன்ட்ரோலரை அலுவலகத்திலும் மற்றொன்றை வீட்டிலும் வைக்கலாம். இது கன்ட்ரோலரை எடுத்துச்செல்லுவதை விட உங்களுக்கு சுலபமாக இருக்கும்.
அடிக்கடி நோயாளி இன்ஹேலர் (inhaler) வேலை செய்யவில்லை என்று குறை சொல்லும் பட்சத்தில், நோயாளிக்கு இன்ஹேலரைப் (inhaler) பயன்படுத்தத் தெரியவில்லை என்பதை மருத்துவர் கண்டுபிடித்துவிடுவார். அதனால் நல்ல ஆலோசனை என்னவென்றால் உங்கள் மருத்துவர் அல்லது ஆலோசகர் முன்னிலையில் கன்ட்ரோலரைப் பயன்படுத்தினால் நீங்கள் தவறாகப் பயன்படுத்தும்போது உடனடியாக உங்களைத் திருத்துவார். சரியான முறையில் இன்ஹேலரைப் (inhaler) பயன்படுத்துதல் உங்கள் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.



ஆஸ்துமா அட்டாக்கின்போது இவை வேகமாக மற்றும் உடனடியாக நிவாரணம் கிடைக்க உள்ளிழுக்கப்படுகிறது. இந்த குறுகிய கால மருந்தானது ரிலீவர்கள் (Reliever) அல்லது ரெஸ்க்யூயர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. அவசரத்திற்கான SOS மருந்தாக அதை நீங்கள் நினைக்கலாம். அட்டாக் இருக்கும்போது இருமல் மற்றும் மூச்சுத்திணறலிலிருந்து உங்களுக்கு அவை நிவாரணம் அளிக்கின்றன. அதனால் நீங்கள் மூச்சுவிடமுடியாமல் தவிக்கும்போது அல்லது அட்டாக்கின் முதல் அறிகுறி தெரியும் போதே மருத்துவர் பரிந்துரைத்த இன்ஹேலரை (inhaler) நீங்கள் உபயோகிக்க வேண்டும். சிலமுறை உள்ளிழுக்கவும். உங்கள் சுவாசப் பாதையில் உள்ள தசைகள் தளர உதவி மூச்சுவிடுவதை சுலபமாக்கும்.

எல்லா ஆஸ்துமா நோயாளிகளும், அவசரத்திற்கு, அவர்கள் வெளியில் செல்லும்போது கூட அவர்களின் ரிலீவர்களை (Reliever) எடுத்துசெல்ல வேண்டும். எந்த எச்சரிக்கையும் இல்லாமல் ஆஸ்துமா அட்டாக் வர வாய்ப்புள்ளது.

ரிலீவர்களைப் (Reliever) பயன்படுத்துவதற்கான உதவிக்குறிப்புகள்

உங்கள் ரிலீவரை நீங்கள் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். ஒன்று இல்லாமல் எப்பொழுதும் இருக்கவேண்டாம். ஆஸ்துமா அட்டாக் எப்பொழுதும் எங்கும் ஏற்படலாம்.
இரு ரிலீவர்களை (Reliever) வைத்திருக்கவும் – ஒன்று வீட்டில், மற்றொன்று அலுவலகத்தில். உங்கள் குழந்தைக்கு ஆஸ்துமா இருந்தால் ரிலீவரை பள்ளியில் வைத்திருக்கவும்.
உங்கள் மருத்துவர் அல்லது ஆலோசகரிடம் உங்கள் இன்ஹேலரை (inhaler) எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் காட்டவும். நீங்கள் தவறாகப் பயன்படுத்தினால் அவர் திருத்தலாம் உங்களுக்கு நோயின் அட்டாக் வரும்போது இன்ஹேலரை (inhaler) முறையாகப் பயன்படுத்தினால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
நீங்கள் உங்கள் வீட்டில் குடும்பத்தாரிடமும், அலுவலகத்தில் நண்பர்களிடமும் அல்லது பள்ளியிலும் இன்ஹேலரை (inhaler) எவ்வாறு பயன்படுத்துவது என்று கற்றுக்கொடுக்கவும். அதனால் உங்களுக்கு பிரச்சனையிருந்தால், உங்கள் இன்ஹேலர் (inhaler) மூலம் அவர்கள் உங்களுக்கு உதலாம்.
உங்களுக்கு ஆஸ்துமா அட்டாக் ஏற்பட்டால் என்ன செய்யவேண்டும் என்பதை அறிய இங்கு கிளிக் செய்க.

தயவுசெய்து நினைவில் கொள்ளவும்: எந்த மாதிரியான மருந்து மற்றும் இன்ஹேலரைப் (inhaler) பயன்படுத்தவேண்டும் என்பதற்கான மருத்துவரின் ஆலோசனையை எப்பொழுதும் பின்பற்றவும். உங்கள் மருத்துவரிடம் இன்ஹேலரை (inhaler) எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் பராமரிப்பது என்பதைக் கேட்டுத்தெரிந்துகொள்ளவும். இருவரும் உள்ள முதல் ஆலோசனை மிகவும் முக்கியம் மற்றும் முதலிலிருந்தே அதைக் களைய முயற்சிக்கவும். உங்கள் ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்க இது மிகவும் உதவும்.

உங்கள் மருத்துவர் இரு இன்ஹேலர்களைப் (inhaler) பரிந்துரைத்திருந்தால், ஒன்று கன்ட்ரோலராகவும் ஒன்று ரிலீவராகவும் இருக்கும். எது கன்ட்ரோலர் (Controller), எது ரிலீவர் (Reliever) என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவும். நினைவில்கொள்ள இன்ஹேலரின் (inhaler) மேல் "கன்ட்ரோலர்” (Controller) மற்றும் ”ரிலீவர்” (Reliever) என்று எழுதிவைக்கவும்.

மேலே திரும்புக










  இன்ஹேலரை (inhaler) எவ்வாறு பயன்படுத்துவது


உலகத்தில், இன்ஹேலேஷன் என்பது ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைப்பதற்கான எளிய, பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழி என்றும், அதன்மூலம் தரமான வாழ்விற்கான உத்தரவாதத்தை வழங்கக்கூடியது என்றும் நிரூபிக்கப்பட்டது. இன்ஹேலேஷனில், உங்கள் மருந்தை வாய்மூலம் சிறிய சாதனத்தைப் பயன்படுத்தி சுவாசித்தலே இன்ஹேலர் (inhaler) ஆகும். வயது, பொருந்தும் நிலை அல்லது ஆஸ்துமாவின் நிலையைப் பொறுத்து பலதரப்பட்ட ஆஸ்துமா நோயாளிகளின் தேவையைப் பூர்த்திசெய்ய, பல வகை இன்ஹேலர்கள் (inhaler) உள்ளன.

முதன்மையான 2 வகை இன்ஹேலர்களாவன, (inhaler) மீட்டர்டு டோஸ் இன்ஹேலர்ஸ் (inhalers) (MDIகள்) மற்றும் ட்ரை பவுடர் இன்ஹேலர்ஸ் (inhalers) (DPIகள்).

மீட்டர்டு டோஸ் இன்ஹேலர் (inhaler) (MDI) என்பது ஸ்ப்ரே இன்ஹேலர் (inhaler) என்று அதன் செயலை வைத்து அழைக்கப்படுகிறது. சிலர் இதை ‘பம்ப்’ என்றும் அழைப்பர். ஏனென்றால் இந்த இன்ஹேலரைப் (inhaler) பயன்படுத்தி பம்பிங் செயல் நடக்கும்.

பல மருத்துவர்கள் ட்ரை பவுடர் இன்ஹேலர்களை (inhaler) (DPIகள்) நோயாளிகளுக்கு பரிந்துரைப்பர்.

இன்ஹேலர்கள் ஏன் சிறப்பானவை என்று அறிய இங்கே கிளிக் செய்யவும்

உங்கள் இன்ஹேலரை (inhaler) சரியாக எப்படி பயன்படுத்துவது.

மேலே திரும்புக










  ஆஸ்துமாவை எவ்வாறு கன்ட்ரோலில் வைப்பது


ஆஸ்துமா என்பது தொடர்ந்திருக்கும் நிலை எனவே அதற்கு தொடர்ந்த பராமரிப்பு மற்றும் சிகிச்சை அவசியம். நீங்கள் ஆஸ்துமாவுடன் போரிட்டு அதனை வெற்றிகரமாகக் கன்ட்ரோலில் வைக்கலாம். அதனால் அடுத்த ஆஸ்துமா அட்டாக்கை நீங்கள் அரிதாகவே எதிர்கொள்வீர்கள். இதன்மூலம் நீங்கள் ஆரோக்கியமான நிறைவான வாழ்வை வாழ முடியும்.

உங்கள் ஆஸ்துமாவை கன்ட்ரோலில் வைக்க பின்வரும் நான்கு வழிகள் உதவும்.
உங்கள் காரணிகளைத் தவிர்க்கவும்.
உங்கள் கன்ட்ரோலர் (Controller) மருந்தை தொடர்ந்து எடுக்கவும்.
உங்கள் நுரையீரலின் சக்தியை அடிக்கடி பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) /பீக் ஃப்ளோ மாஸ்டர் பயன்படுத்தி சோதிக்கவும்.
உங்கள் மருத்துவரிடம் தொடர்ந்து ஆலோசிக்கவும்.

நீங்கள் இந்த நான்கு விஷயங்களில் கவனமாக இருந்தால் உங்கள் ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்கும் சரியான வழியில் உள்ளீர்கள்.


अपने ट्रिगर्स से सावधान रहें
ஆஸ்துமா நபருக்கு நபர் வேறுபடும். பெரியவரிலிருந்து பெரியவர் மற்றும் குழந்தையிலிருந்து குழந்தை. அதனால் நீங்கள் உங்களுக்குள்ள ஆஸ்துமாவைப் பற்றியும் அதன் காரணிகள் மற்றும் நோய்க்குறிகளைப் பற்றியும் அறிந்திருப்பது முக்கியம்.

ஆஸ்துமா நோய்க்குறிகள் சிலவற்றால் தோன்றும் அல்லது தொடங்கும். அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் நீங்கள் ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்கலாம். சில பொதுவான காரணிகளான சிகரெட் புகை, காற்று மாசு, தூசி, உடல் உழைப்பு மற்றும் உடற்பயிற்சி, பூஞ்சருகு, கம்பளி அல்லது இறகுகள். இவைதவிர ஜலதோஷம், இருமல் மற்றும் வைரஸ்கள், பயம், அழுகை, சிரிப்பு போன்ற அதிகமான உணர்ச்சிகளும் காரணமாகும். வலி நிவாரணிகள் போன்ற மருந்துகளை அதிகமாக எடுத்தலும் காரணமாகலாம்.

உங்களுக்கான காரணியை நீங்கள் கண்டறிந்த பின் அவற்றைத் தவிர்க்க முயற்சிசெய்யவும். தொடர்ந்த இன்ஹேலர் (inhaler) சிகிச்சை முறை உங்கள் ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்கும்.


உங்கள் கன்ட்ரோலர் (Controller) மருந்தை தொடர்ந்து எடுக்கவும்.
உங்கள் ஆஸ்துமா நோய்க்குறிகளை கன்ட்ரோலில் வைக்க எந்த மருந்தை எப்போது எடுக்கவேண்டும் என்பதைத் தெரிந்திருக்கவும். உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தபடி தொடர்ந்து கன்ட்ரோலர் (Controller) இன்ஹேலரைப் (inhaler) பயன்படுத்தவும். உங்கள் காரணியில் இருக்கும்படி நேர்ந்தாலும் ஆஸ்துமா தாக்குதலின் தாக்கத்தை இது குறைக்கும். நீங்கள் நன்றாக இருந்தாலும் கன்ட்ரோலரை நிறுத்தும் தவறை மட்டும் செய்யவேண்டாம். ஏன்? இரத்த அழுத்த நோயாளி பீபிக்கான மருந்தை எடுப்பதை நிறுத்தினால் பீபி அதிகமாக வாய்ப்புள்ளது. அதேபோல, உங்கள் கன்ட்ரோலரைப் பயன்படுத்தாததால் உங்களுக்கு ஆஸ்துமா அட்டாக் மறுபடி வரலாம்.

உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் உங்கள் ஆஸ்துமாவிற்கான மருந்தை நிறுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் நிலை மற்றும் கட்டுக்கோப்பை வைத்து உங்கள் மருத்துவர் மருந்தின் வீரியத்தைக் குறைக்கலாம் என்பதில் நினைவில் கொள்ளவும்.

உங்களுக்கு உடனடி நிவாரணம் தேவைப்படும்பொழுது ரிலீவர் (Reliever) மருந்தை உடனடியாக பயன்படுத்தவும். இவற்றை நீங்கள் தொடர்ந்தால், உங்கள் ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்கலாம்.

உங்கள் நுரையீரலின் சக்தியை அடிக்கடி பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) (சுவாசக்கருவி) பயன்படுத்தி சோதிக்கவும்
இரத்த அழுத்தக் கருவியைக் கொண்டு பீபியை சோதிப்பதுபோல, தெர்மாமீட்டர் கொண்டு காய்ச்சலைக் கணக்கிடுவது போல, பீக் ஃப்ளோ மீட்டரைக் (Breathometer) கொண்டு உங்கள் நுரையீரல் சக்தியைக் கணக்கிடலாம். பீக் ஃப்ளோ மீட்டருடன் (Breathometer) உங்கள் ஆஸ்துமாவை கண்காணிப்பது சுலபம். உங்கள் நுரையீரலிலிருந்து எவ்வளவு சுலபமாக காற்றை வெளித்தள்ள முடியும் என்பதை இந்த சிறிய கருவி கணக்கிடுகிறது. எவ்வளவு எளிதாக பீக் ஃப்ளோ மீட்டரைப் (Breathometer) பயன்படுத்தலாம் என்பதை நீங்களே பாருங்கள்.

சிகிச்சைத் தொடங்கியவுடன் தொடர்ந்து உங்கள் கன்ட்ரோலர் (Controller) மருந்தை எடுத்தல், உங்கள் சுவாச சோதனை முடிவுகள் எவ்வாறு மேம்படுகிறது என்பதை பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) கொண்டு நீங்கள் கண்டறியலாம். இந்த வழியில், உங்கள் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துவதில் அடைந்த முன்னேற்றத்தை யூகிக்கத் தேவையில்லை.

உங்கள் மருத்துவரைக் கொண்டு நோயை கன்ட்ரோலில் வைப்பதற்கான இலக்கை நிர்ணயித்து பின்னர் உங்கள் நோய் கட்டுப்பாட்டை அளவிடலாம். இது உங்களை கட்டுக்கோப்புடனும், ஒவ்வொரு நிலையிலும் ஆஸ்துமாவை புரிந்து கன்ட்ரோலில் வைக்க உதவும். உங்கள் இலக்கை அடைந்தவுடன் மருத்துவர் தொடர் ஆலோசனையின்போது உங்கள் மருந்தின் வீரியத்தைக் குறைக்கலாம் என்பதே இதில் சிறந்த ஒன்று.

உங்கள் ஆஸ்துமாவைக் கணக்கிட மருத்துவர் பரிந்துரைத்தபடி தொடர்ந்து உங்கள் பீக் ஃப்ளோ மீட்டரைப் (Breathometer) பயன்படுத்தி சரிபார்ப்பது நல்லது. சில நாள் எந்த அட்டாக் இல்லாமல் இருந்தாலும் தொடர்ந்து சரிபார்த்தல் அவசியம் என்பதை நினைவில்கொள்ளவும்.

எங்கு பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) வாங்கலாம்? உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைக்குச் செல்லும்போது பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) பற்றி கேட்கவும். *உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்க பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) அளவை நீங்களே குறித்துவைக்கவும். நீங்கள் உங்களுக்கு சொந்தமாக பீக் ஃப்ளோ மீட்டரை (Breathometer) உங்கள் மருந்தகத்தில் வாங்குவதைப் பற்றி யோசிக்கலாம்.

உங்கள் மருத்துவரிடம் தொடர்ந்து ஆலோசிக்கவும்
உங்களுக்கும் உங்கள் மருத்துவருக்கும் ஆஸ்துமாவுடன் போராடுவதில் சரிபாதி பங்குள்ளது. மருத்துவரை நீங்கள் நன்றாக இருக்கும்பொழுதும், அடிக்கடி பார்க்கவும். உங்கள் இன்ஹேலர் (inhaler) பற்றிய எல்லா நன்மைகள் பற்றியும் கேட்கத் தயங்கவேண்டாம். உங்கள் இன்ஹேலரை (inhaler) எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் பராமரிப்பது என்பதைப் பற்றி அவரின் உதவியுடன் தெரிந்துகொள்ளவும். நீங்களாகவே உங்கள் மருந்தை நிறுத்தக்கூடாது. உங்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி பரிந்துரைத்த மருந்தை எடுக்கவும்.

உங்கள் மருத்து மருத்துவர் சொல்லும் எல்லா சோதனையையும் எடுத்து சிகிச்சையை நம்பிக்கையுடன் தொடரவும்.

உங்கள் மருத்துவக் கோப்பை பாதுகாப்பாக வைத்திருங்கள் நீங்கள் மறுமுறை மருத்துவரை அணுகும்போது உங்கள் மருத்துவ சிகிச்சை முறையை அவர் ஒருமுறை பார்க்கலாம். இது உங்கள் ஆஸ்துமாவை உங்கள் மருத்துவர் கன்ட்ரோலில் வைக்க உதவும்.
நீங்கள் எடுக்கும் எந்த மருந்தைப் பற்றியும் உங்கள் மருத்துவரிடம் சொல்ல மறக்கவேண்டாம். சில வலி நிவாரணிகள் ஆஸ்துமா நேய்க்குறிக்கு காரணியாக இருக்கலாம். எப்பொழுதெல்லாம் உடல்நிலை சரியில்லையோ – முதுகு வலி அல்லது காய்ச்சல் அல்லது ஜலதோஷம் எதுவாயிருந்தாலும் முக்கியமாக உங்கள் கண்ணுக்கு மருந்து எடுத்தால் உங்கள் மருத்துவரிடம் அந்த மருந்தைப் பற்றி அறிவிக்கவும்.


ஆஸ்துமாவும் உங்கள் வாழ்க்கை முறையும்

நீங்கள் எந்த சிறப்பு உணவுக்கட்டுப்பாட்டையும் பின்பற்ற வேண்டாம் மற்றும் நீங்கள் விரும்பும் ஐஸ்கிரீம் அல்லது சாக்லேட் அல்லது ஸ்பெஷல் விருந்து எதையும் மறுக்கத்தேவையில்லை. அவை அதிகமாகாமல் இருந்தால், ஆஸ்துமாவானது நீங்கள் விரும்பும் எந்த உணவையும் நிறுத்தும்படி செய்யாது. அலர்ஜியைத்(Allergy) தூண்டிவிடும் உணவைத் தவிர்க்கவும். கொட்டைகள் அல்லது சேர்க்கை மற்றும் வேதிப்பொருள் நிறைந்த கேன், பாட்டிலில் அடைத்த மற்றும் பேக்செய்த உணவைத் தவிர்க்கவும். உங்களுக்கு அலர்ஜி(Allergy) இருப்பதாக நினைத்தால் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்கவும்.
ஒவ்வொருவருக்கும் அவர்களின் மனஅழுத்தத்தைக் குறைக்கவும் தளர்வாக இருக்கவும் சில காலம் எடுக்கும். மனஅழுத்தம் ஆஸ்துமாவிற்கு முக்கிய காரணி என்பதால் நீங்கள் தளர்வாக இருப்பது அவசியம்.

அதனால் சில அமைதியாக்கும் முறையைக் கற்று அதனை உங்கள் வாழ்வின் பகுதியாக மாற்றவும். நல்ல பயிற்சியாளர் மூலம் யோகாவைத் தொடங்கலாம். அமைதிப்படுத்தும் பழக்கவழக்கங்களை உருவாக்கவும். பார்க்கில் நடக்கவும், உங்களுக்குப் பிடித்த படத்தைப் பார்க்கவும்... உங்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றை செய்யவும். இதுபோன்ற செயல்கள் உங்கள் வேலை அல்லது மனஅழுத்தம் உருவாக்கும் எதிலிருந்தும் விடுபடச் செய்யும்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் உங்களுக்கு நல்லது. உங்களுக்குப் பிடித்த எந்த நிகழ்வு அல்லது உடற்பயிற்சியிலிருந்தும் ஆஸ்துமாவானது உங்களைத் தடுக்க விட்டுவிட வேண்டாம். உங்களுக்குப் பிடித்திருந்தால் அதை உங்கள் வாழ்க்கைமுறையின் அங்கமாக மாற்றவும். அது உங்கள் ஆரோக்யம் மற்றும் நலனில் பல அற்புதத்தைச் செய்யும். அதனால் உங்கள் இஷ்டப்படி இருங்கள்! நீங்கள் செய்யவிருக்கும் உடற்பயிற்சி பற்றி உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்க மறக்க வேண்டாம்.

மேலே திரும்புக









  ஆஸ்துமா அட்டாக்கின்போது என்ன செய்ய வேண்டும்


நீங்கள் கன்ட்ரோலரைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டு காரணிகளை தவிர்த்தால், அட்டாக் வருவதற்கான வாய்ப்புக் குறையும். அவசரகாலத்தின்போது பின்வரும் வழிகளைப் பின்பற்ற மறக்கவேண்டாம்:

நீங்கள் நேராக உட்காரவேண்டும், படுக்கக்கூடாது. உங்கள் உடை தளர்வாக இருக்கவேண்டும். நீங்கள் நிம்மதியாகவும் அமைதியாகவும் இருக்க முயற்சிக்க வேண்டும். நல்ல முடிவைத் தரும்படி உங்கள் அருகிலிருக்கும் உறவினர் அல்லது நண்பர் உதவவேண்டும்.
தாமதமின்றி, மருத்துவர் தெரிவித்தபடி அந்த அளவில் ரிலீவர் மருந்தை எடுக்கவேண்டும்.
ஐந்து நிமிடம் காத்திருக்கவும். எந்த பலனும் இல்லையென்றால் உங்கள் மருத்துவர் பரிந்துரைத்தபடி ரிலீவர் (Reliever) மருந்தின் கூடுதல் அளவை எடுக்கவேண்டும்.
இதுவரை எந்த நிவாரணமும் கிடைக்கவில்லையென்றால், உங்கள் மருத்துவரை உடனடியாக தொடர்புகொள்ளவும். உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் ரிலீவர் (Reliever) மருந்தை அதிகம் எடுக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்க.
உங்கள் மருத்துவரை அணுக இயலவில்லையென்றால், அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு சென்று அவசர சிகிச்சையைப் பெறவும்.









  தனிச் சூழ்நிலையில் ஆஸ்துமா


உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால் உங்களுக்கான உலகம் முடிந்துவிட்டது என்று அர்த்தமல்ல. ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தி சாதாரண வாழ்வை வாழலாம் என்பதைத் தெரிந்திருப்பது முக்கியம். பின்வரும் பிரிவுகள் எந்தெந்த சூழ்நிலையில் ஆஸ்துமா வரும் என்பதை விளக்குகிறது. நாம் பார்க்கும் சில தலைப்புகளாவன: கருவுற்றிருக்கும் போது ஆஸ்துமா, ஆஸ்துமாவும் பாலூட்டும் தாயும், ஆஸ்துமாவும் உங்கள் வேலையும், ஆஸ்துமாவும் பயணமும், ஆஸ்துமாவும் விளையாட்டும், ஆஸ்துமாவும் புகைப்பிடித்தலும், ஆஸ்துமாவும் ஈடுசெய்யும் மருந்தும், ஆஸ்துமாவும் நாசியழற்சியும் மற்றும் மேலும் பல.

Asthma in pregnancy
கருவுற்றிருக்கும்
போது ஆஸ்துமா
Asthma in lactating mothers
பாலூட்டும் தாய்க்கு ஆஸ்துமா
Asthma and your job
ஆஸ்துமாவும் உங்கள் வேலையும்
Asthma and travel
ஆஸ்துமாவும்
பயணமும்
Asthma and Sports
ஆஸ்துமாவும் விளையாட்டும்
Asthma and Allergic Rhinitis
ஆஸ்துமா மற்றும் நாசியழற்சி






கருவுற்றிருக்கும் போது ஆஸ்துமா:
முதலாவதாக, நீங்கள் இல்லற வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால் ஆஸ்துமா நீங்கள் கர்ப்பமாவதிலிருந்து தடுக்காது. இரண்டாவதாக, நீங்கள் கருவுற்றிருந்து ஆஸ்துமா இருந்தால் நீங்கள் நார்மலான, பாதுகாப்பான குழந்தைப்பேற்றைப் பெறலாம். தொடர் மருந்தின் மூலம் உங்கள் ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைப்பது முக்கியம் மற்றும் பிற கருவுற்றிருக்கும் பெண்ணைப் போல சாதாரண முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றவும் – உங்கள் மருத்துவர் நல்ல ஆலோசனைகளைக் கூறுவார். சில நேரம், உங்கள் மருந்தை சரிவர எடுக்காவிட்டால் ஆஸ்துமா அறிகுறிகள் மோசமாகலாம். கருவிற்கு இன்ஹேலர் (inhaler) மருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

Asthma in pregnancy Asthma in lactating mothers Asthma and your job Asthma and travel Asthma and Sports Asthma and Allergic Rhinitis
மேலே திரும்புக

பாலூட்டும் தாய்க்கு ஆஸ்துமா:
உங்களுக்கு ஆஸ்துமா இருந்து நீங்கள் குழந்தைக்கு பால் கொடுக்க விரும்பினால், தயவுசெய்து செய்யவும். ஆஸ்துமா தொற்றுவியாதி அல்ல. நீங்கள் ஏற்கனவே இன்ஹேலர் (inhaler) முறையைக் கடைபிடித்தால், சிறிய அளவு ஆஸ்துமா மருந்து பாலில் கலக்க வாய்ப்புள்ளது. உண்மையில், எந்தப் பக்கவிளைவுமின்றி உலகிலுள்ள எல்லா தாய்மார்களும் இன்ஹேலேஷனின் போது குழந்தைகளுக்கு பால் கொடுக்கின்றனர். இதில் முக்கியமானது என்னவென்றால், இப்பொழுதெல்லாம் இன்ஹேலர் (inhaler) மருந்து மிகவும் பாதுகாப்பானது, அவற்றை கர்ப்பகாலத்தின்போது பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.

Asthma in pregnancy Asthma in lactating mothers Asthma and your job Asthma and travel Asthma and Sports Asthma and Allergic Rhinitis
மேலே திரும்புக

ஆஸ்துமாவும் உங்கள் வேலையும்:
உங்கள் ஆஸ்துமா கன்ட்ரோலில் இருந்தால் வேலையைத் தவிர்க்கவோ பணம் போகுமென்றோ கவலையில்லை. நகை தொழிலாளி, படம் வரைபவர், பெஸ்டிசைட், குவாரி, ப்ரின்டிங் மற்றும் ப்ளாஸ்டிக் நிறுவனம் ஆகிய தொழில் செய்பவர்கள், செஃப்ஸ் மற்றும் பேக்கர்ஸ், சோல்டெரர்ஸ் மற்றும் மெட்டல் ஒர்க்கர், நுரை வேலை செய்பவர் மற்றும் ஸேப்ரே பெயின்டர், முடி வெட்டுபவர் மற்றும் கார்பென்டர் போன்றோர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படலாம். இருப்பினும், இது சில கெமிக்கலை சுவாசிப்பதால் வரும் அல்லது சில சமயம் நுரையீரலில் எரிச்சலை உண்டாக்கும். இவையே காரணிகள் என்று அழைக்கப்படும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், உங்கள் கன்ட்ரோலரை(Controller) சரியாக மற்றும் தொடர்ந்து எடுக்கவும். மேலும் மருத்துவரை அணுகவும். அவரே ஆலோசனைக்கு சிறந்த நபர்.

Asthma in pregnancy Asthma in lactating mothers Asthma and your job Asthma and travel Asthma and Sports Asthma and Allergic Rhinitis
மேலே திரும்புக

ஆஸ்துமாவும் பயணமும்:
ஆஸ்துமா உங்கள் வேலையைப் பொறுத்தோ அல்லது பயணத்தைப் பொறுத்தோ வருவதில்லை. உங்கள் வேலையில் நீங்கள் அடிக்கடி பயணம் செய்யவேண்டி இருந்தால், மருத்துவர் பரிந்துரைப்பு, வழிமுறைகளை எழுதி மற்றும் அவசர அழைப்பு எண்ணை உங்களுடன் எப்பொழுதும் கையில் வைத்திருக்கவும். முக்கியமாக, போதுமான அளவு மருந்து – கன்ட்ரோலர் (Controller) மற்றும் ரிலீவர் (Reliever) இன்றி எப்பொழுதும் பயணிக்க வேண்டாம். நீங்கள் கண்டிப்பாக உங்கள் கன்ட்ரோலரைத் தொடர்ந்து எடுக்கவேண்டும் என்பதைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். உண்மையில், நீங்கள் ரிலீவரைக் கையில் வைத்திருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். வானிலையை நீங்கள் பயணம் தொடங்கும் முன்பே சரிபார்த்து அதற்கேற்ப உடைகளை எடுத்துவைக்கவும். மேலும் அறிக…

Asthma in pregnancy Asthma in lactating mothers Asthma and your job Asthma and travel Asthma and Sports Asthma and Allergic Rhinitis
மேலே திரும்புக

ஆஸ்துமாவும் விளையாட்டும்:
விளையாட்டு அல்லது வாழ்க்கையில் வெற்றியாளராக இருக்க ஆஸ்துமா தடையில்லை. பெரிய கிரிக்கெட், கூடைப்பந்து விளையாட்டு வீரர்களுக்கும், நீச்சல் மற்றும் ஓட்டப்பந்தய வீரர்களுக்கும் ஆஸ்துமா உள்ளது. மேலும் அவர்கள் ஒலிம்பிக் பந்தயங்களில் கோல்டு மெடலை வெல்லும் நோக்கில் கலந்துகொண்டுள்ளனர்.

உங்களுக்கு ஆஸ்துமா கன்ட்ரோலில் இருந்தால் எல்லா உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் நல்லபடியாக பங்கேற்கலாம். இருந்தபோதிலும் உங்கள் கன்ட்ரோலர் (Controller) மருந்தை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்படி அடிக்கடி எடுப்பது முக்கியம். உடற்பயிற்சிக்கு முன்பு ரிலீவர் (Reliever) /ரெஸ்க்யூயரைப் பயன்படுத்துவதால் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஏற்படும் நன்மைகளால் எப்பொழுதும் உங்கள் ரிலீவரைக் கையில் வைத்திருக்கவும். கூடுதல் மருந்தை எடுத்துச்செல்ல மறக்க வேண்டாம். உங்களுடன் வேலை செய்பவர்கள், நண்பர்கள் மற்றும் உங்கள் உடற்பயிற்சியாளர் அல்லது பயிற்சியாளர் ஆகியோரிடம் உங்களுக்கு அட்டாக் ஏற்பட்டால் உங்களுக்காக என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிவிக்கவும்.

ஆஸ்துமாவிற்கான நல்ல உடற்பயிற்சி யோகா, நீச்சல் மற்றும் குறுகிய தொலைவு ஓட்டப்பந்தயம் ஆகியவை. மேலும் தொடர்ந்து ஓடாமல் இடைவெளி இருப்பதால் உங்களுக்கு ஓய்வு கிடைக்கிறது. நீங்கள் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுப் பற்றி தீவிரமாக இருந்தால் அடிக்கடி உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

Asthma in pregnancy Asthma in lactating mothers Asthma and your job Asthma and travel Asthma and Sports Asthma and Allergic Rhinitis
மேலே திரும்புக

ஆஸ்துமா மற்றும் நாசியழற்சி:
ஆஸ்துமா மற்றும் நாசியழற்சி (மூக்குஅரிப்பு) க்கிடையே பெரிய தொடர்பு உள்ளது. நாசியழற்சி உள்ளவர்கள் அடிக்கடி தும்மலுடன் கூடிய ஜலதோஷம் மற்றும் மூக்கிலிருந்து நீர்வடிதல் ஆகியவற்றால் அவதிப்படுவர். நாசி(மூக்கு) சுவாசப் பாதையின் தொடர்ச்சி என்பதால், ஆஸ்துமா உள்ள சுமார் 70% நோயாளிகளுக்கு நாசியழற்சி இருக்கும். பொதுவாக, முதலில் மூக்கும் பிறகு நுரையீரலும் பாதிக்கப்படும். ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்க நாசியழற்சியைக் கண்டறிந்து குணப்படுத்துதல் முக்கியம்.

நாசியழற்சி என்பது தூசு, செல்லப்பிராணி அல்லது பூக்களின் மகரந்தத் தூள் ஆகியவற்றை சுவாசிப்பதனால் ஏற்படும் பலதரப்பட்ட அறிகுறிகளின் கூட்டாகும்.

நோய்க் குறிகளாவன:
• மூக்கு ஒழுகுதல் (நாசியிலிருந்து தொடர்ந்து நீர் வழிதல்)
• தும்மல்
• மூக்கடைப்பு
• மூக்குஅரிப்பு (நாசி, கண்கள் அல்லது வாயின் மேல்பகுதியில் அரிப்பு)

இந்த அறிகுறிகள் சில குறிப்பிட்ட காலத்தில் ஏற்படலாம். இது பருவத்திற்குறிய நாசியழற்சி (SAR) எனப்படும். இது வருடத்தில் எப்பொழுதும் இருந்தால் தொடர்ந்த நாசியழற்சி (PAR) எனப்படும்.

உங்களுக்குள்ள நாசியழற்சியை முக்கியமாக கருதவும். இதை சரியான நேரத்தில் சரிசெய்யாவிடில் ஆஸ்துமா அதிகமாகும் மற்றும் காது தொற்று, புரையழற்சி போன்ற பிற விளைவுகளும் நேரலாம்....சரியான சிகிச்சை பெற உங்கள் மருத்துவரை அணுகவும்.

Asthma in pregnancy Asthma in lactating mothers Asthma and your job Asthma and travel Asthma and Sports Asthma and Allergic Rhinitis
மேலே திரும்புக