Change Language
Select Langauge
English
हिन्दी
తెలుగు
ಕನ್ನಡ
বাংলা
मराठी
ગુજરાતી
|
ப்ரீத்ஃப்ரீ பற்றி
|
Cipla
|
செய்தி அறை
|
பதிவுபெறு
|
பதிவிறக்கம்
|
தேடல்
இது இருமலா அல்லது ஆஸ்துமாவா?
சிகிச்சைமுறை &
கட்டுப்பாடு
சந்தேகங்களும்,
தீர்வுகளும்
மூக்கழற்சி
அலர்ஜி
COPD
மெனு
நோயாளிகளின் கதைகள்
உங்கள் ஆஸ்துமாவின் அளவைக் கணக்கிடவும்
கட்டுக்கதைகள் & உண்மைகள்
குழந்தைகளிடையே காணப்படும் ஆஸ்துமா
இன்ஹேலரைப் பயன்படுத்தவும்
நிகழ்வுகள்
தொடர்புப்படுத்தவும்
நீங்கள் எப்படி உதவலாம்
கட்டுக்கதைகள் & உண்மைகள்
பல நோய்களைப் போல ஆஸ்துமாவைப் பற்றிய சந்தேகங்கள், வதந்திகள், கட்டுக்கதைகள் மற்றும் தவறான தகவல்கள் பரவலாகக் காணப்படுகின்றன. சிலர் ஆஸ்துமா தொற்றுநோய் என நினைக்கிறார்கள். சிலரோ ஆஸ்துமா உடற்சார்ந்த நோய் என்றும், மேலும் அது நினைவை பாதிக்கும் என்றும் நினைக்கினறனர். மேலும் சிலர் ஆஸ்துமா அவ்வளவு பயங்கரமானது இல்லை, யாரும் அதன்மூலம் இறப்பதில்லை என நினைக்கின்றனர். இங்கு நாம் ஆஸ்துமாவைப் பற்றிய அனைத்து சந்தேகங்களையும் மருத்துவ ஆய்வு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிப்படி தீர்க்கலாம்.
கட்டுக்கதை
இன்ஹேலர்களைத் தொடர்ந்து பயன்படுத்துதல் அதற்குப் பழக்கப்படுத்திவிடும் மற்றும் அடிமையாக்கிவிடும்.
வாய்வழி மருந்து, அதாவது மாத்திரைகள் மற்றும் சிரப்புகள் இன்ஹேலேஷனைவிட சிறந்தது.
இன்ஹேலர்ஸ், மாத்திரை/சிரப்புகளை விட விலையுயர்ந்து
ஆஸ்துமாவிற்கான இன்ஹேலர் மருந்துகள்/இன்ஹேலர்களில் ஸ்டீராய்ட்கள் வீரியமானது. அதை தீவிரமான ஆஸ்துமாவிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஆஸ்துமா வரும் போகும். அது எப்பொழுதும் இருக்காது.
ஆஸ்துமாவைக் குணப்படுத்தி விடலாம்.
உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால் சாதாரண வாழ்வு வாழ இயலாது.
உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், நீங்கள் உடற்பயிற்சி செய்யவோ அல்லது விளையாடவோ முடியாது.
என் ஆஸ்துமாவைக் கட்டுப்பாட்டில் வைக்க நிறைவான மற்றும் மாற்று சிகிச்சைகள் எனக்கு உதவும்.
ஆஸ்துமா வேறு ஒருவரிடமிருந்து வரக்கூடிய தொற்றுநோய்.
கர்ப்பமாக இருக்கும் பெண் ஆஸ்துமா இன்ஹேலரைப் பயன்படுத்தக்கூடாது.
பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) விலையுயர்ந்தது மற்றும் பயன்படுத்துவது சுலபமில்லை.
ஆஸ்துமா வரலாறு ஒருவரின் பெற்றோர்களுக்கு இல்லையென்றால் அது அவருக்கு வர வாய்ப்பில்லை.
நீங்கள் ஆஸ்துமாவிலிருந்து குணமடையலாம் அல்லது வயதாக ஆக ஆஸ்துமா குறையலாம்.
உங்களுக்கு சுவாசப் பிரச்சனையிருந்தால் மட்டுமே ஆஸ்துமா இருக்கும்.
ஆஸ்துமா அட்டாக் திடீரென்று வரும் மற்றும் உடனே அது அதிகரிக்கும்.
ஸ்டீராய்டு மருந்து கடுமையான ஆஸ்துமா உள்ள பெரியவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அதேசமயம் குழந்தைகளுக்கு இல்லை.
ஆஸ்துமா நோய்க்குறிகள் அனைவருக்கு ஒன்றே.
ஆஸ்துமாவினால் யாரும் இறக்கமாட்டார்கள்
கட்டுக்கதை:
இன்ஹேலர்களைத் தொடர்ந்து பயன்படுத்துதல் அதற்குப் பழக்கப்படுத்திவிடும் மற்றும் அடிமையாக்கிவிடும்.
உண்மை:
இல்லை, இன்ஹேலர்களைப் பயன்படுத்துவது பழக்கமாகாது. நீங்கள் இன்ஹேலரை தினமும் பயன்படுத்துவது என்றால் அதற்கு அடிமையாவது என பொருளில்லை. நீங்கள் தினசரி பல்துலக்குதல் தினசரி பழக்கத்தை ஏற்படுத்துகிறதா? அல்லது பால் அறுந்துதல்? அல்லது நீங்கள் தினசரி குளிப்பது? அதேபோல, இன்ஹேலரைப் பயன்படுத்துதல் உங்கள் ஆஸ்துமாவிற்கான நல்ல பழக்கம். அது உங்கள் ஆஸ்துமாவை கட்டுப்பாட்டில் வைக்கும். அதேசமயம் அதற்கு அடிமையானாலும் அது நன்மையைத்தான் கொடுக்கும்.
இருப்பினும், நீங்கள் உங்கள் ரிலீவர் (Reliever) மருந்தை அடிக்கடி எடுப்பதாகத் தெரிந்தால், நீங்கள் உங்கள் கன்ட்ரோலரை சரியாக எடுப்பதில்லை என்று அர்த்தம். நீங்கள் மருத்துவரைப் பார்த்து சரியான வழியைப் பெற்றால் அதுவே சிறந்த வழி.
கட்டுக்கதை:
வாய்வழி மருந்து, அதாவது மாத்திரைகள் மற்றும் சிரப்புகள் இன்ஹேலேஷனைவிட சிறந்தது.
உண்மை:
இல்லை, வாய்வழி மருந்து இன்ஹேலேஷனைவிட சிறந்தது அல்ல. மேலும் அதை நிரூபிக்க போதுமான அளவு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. பல நாடுகளில், ஆஸ்துமாவிற்கு வாய்வழி மருந்துகளைக் காட்டிலும் அதிக பயனுடையதாக, பாதுகாப்பானதாக மற்றும் சிறந்த முறையாக இன்ஹேலர் வெற்றிபெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள நோயாளிகள் பலர் வாய்வழியாக மருந்து எடுப்பதே எந்த நோய்க்குமான சிறந்த வழி என்று நம்புகின்றனர். இருப்பினும் ஆய்வுகள் இன்ஹேலர் மூலம் மருந்து எடுப்பதே சிறந்த வழியாக காட்டுகிறது. மாத்திரை மற்றும் சிரப்புகள் வாய்வழியாக முழுங்க வேண்டியவை.
இவை வயிறு, ரத்தம் பிறகு நுரையீரல் என வேண்டியுள்ளதால் வேலை செய்ய சில காலம் எடுக்கும். நுரையீரலுக்கு மட்டும் தேவைப்படுவதால் அங்கு மட்டுமே மருந்து கொடுக்கப்படும், அதனால் இன்ஹேலேஷன் சிகிச்சை வேகமாக வேலைசெய்யும்.
நீங்கள் கண் தொற்றுக்கு கண் மருந்திடுவதுபோல அல்லது உங்கள் தோலில் வெட்டு இருந்தால் மருந்து தடவுவது போல நுரையீரலை நேரடியாக அடைய இன்ஹேலரைப் பயன்படுத்துகிறீர்கள். இது பிரச்சனையை எளிதில் சமாளிக்கும்.
அதன்பிறகு, வாய்வழி சிகிச்சையில் உங்களுக்கு அதிக வீரியமுள்ள மில்லிகிராமில் (இன்ஹேலேஷனைவிட 40 முறை அதிகமாக) மருந்து தேவை, அதனால் அதிக பக்கவிளைவு ஏற்படும். இன்ஹேலேஷன் சிகிச்சையில், மருந்துகள் மைக்ரோகிராம்களிலும் - மேலும் குறிப்பிட்ட சிறிய அளவு மருந்தே உடலின் பிற பகுதிகளுக்கு செல்கிறது. அதனால் சிறிய அளவே பக்கவிளைவு இருக்கும்.
கட்டுக்கதை:
இன்ஹேலர்ஸ், மாத்திரை/சிரப்புகளை விட விலையுயர்ந்து
உண்மை:
இல்லை, இன்ஹேலேஷன் சிகிச்சை மாத்திரை மற்றும் சிரப்புகளை விட விலை உயர்ந்தது அல்ல. உண்மையில் தினசரி இன்ஹேலரின் விலை மாத்திரைகள்/சிரப்புகளை விட அதிக விலை குறைந்ததே. இந்தியாவில், இன்ஹேலர்ஸ் விலை கட்டுப்படியாகக்கூடிய அளவிலேயே உள்ளது. தினமும் சில ரூபாய்கள்தான் செலவாகும். சில வாய்வழி மருந்துகள் அவை இன்ஹேலர்களை விட விலையுயர்ந்தவை. இன்ஹேலர்களை விட விலையுயர்ந்த சில வாய்வழி மருந்துகள் உள்ளன. இவை உங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்துவதோடு, மிகுந்த பக்கவிளைவுகளையும் உண்டாக்கும்.
கட்டுக்கதை:
ஆஸ்துமாவிற்கான இன்ஹேலர் மருந்துகள்/இன்ஹேலர்களில் ஸ்டீராய்ட்கள் வீரியமானது. அதை தீவிரமான ஆஸ்துமாவிற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உண்மை:
உள்ளிழுக்கப்படும் மருந்துகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல. ஆஸ்துமா என்பது நுரையீரலில் ஏற்படும் கட்டி(நீர்க்கட்டி)யால் வருவது. நுரையீரல் கட்டிகளுக்கான சிறந்த சிகிச்சை ஸ்டீராய்ட்களே. மேலும் அதை உள்ளிழுத்தல் முறையில் எடுப்பதே சிறந்த பயனைத்தரும். நீங்கள் இன்ஹேலேஷன் சிகிச்சை எடுக்கும்பொழுது, ஸ்டீராய்ட் மருந்து நேரடியாக நுரையீரல்களுக்கு செல்கிறது. அதனால் அதன் பக்கவிளைவு மிகவும் குறைவு. இன்ஹேலர்கள் ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களுக்கு மட்டுமல்ல. மிதமான ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் இது பரிந்துரைக்கப்படுகிறது.
ஸ்டீராய்டுகளை மாத்திரை வடிவில் எடுத்தால் அதன் வீரியம் அதிகமாக இருக்கும் (ஒரு ஸ்டீராய்டு மாத்திரை பஃப் அல்லது சாதாரண ஸ்டீராய்டு இன்ஹேலரை விட 40 மடங்கு வீரியம் அதிகமானது) மேலும் அது நுரையீரலால் மட்டுமில்லாமல் பிற உடலுறுப்புகளாலும் எடுத்துக்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து ஸ்டீராய்டு மருந்துகளை அதிக காலம் எடுப்பது உடையக்கூடிய எலும்பு (ஆஸ்டியோபோரோசிஸ்), எடை அதிகரித்தல், விரைவில் சிராய்ப்பு, சர்க்கரை, கண்புரை, நெஞ்சிரைச்சல் மற்றும் செறிமான பிரச்சனை போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். அது உங்களை மன அழுத்தம் அல்லது எண்ண மாற்றங்கள் அல்லது வீங்கிய முகம் (வட்ட முகம்) ஆகியவற்றை ஏற்படுத்தும்.
உங்கள் கன்ட்ரோலரில் இருக்கும் ஸ்டீராய்டு கார்டிகோஸ்டீராய்டு ஆகும். அது பாதுகாப்பானது. கார்டிகோஸ்டீராய்டு என்பது ஸ்டீராய்டின் நகல். அவை சாதாரணமாக நம் உடலிலேயே உற்பத்தி ஆகின்றது. அதனால் இது மிகவும் பாதுகாப்பானது மற்றும் ஆஸ்துமா சிகிச்சைக்கு பயனுள்ளது. சில அத்லெடிக் வீரர்கள் மற்றும் பாடி பில்டர்கள் பயன்படுத்தும் ஸ்டீராய்டு இதுவல்ல என்பதை புரிந்துகொள்வது அவசியம். இருப்பினும், எல்லா இன்ஹேலர்களும் ஸ்டீராய்டுகளைக் கொண்டிருப்பதில்லை, சில, அதிவிரைவு நிவாரண பொருளைக் கொண்டுள்ளது.
உங்கள் நிலைமையைப் பொருத்தே உங்கள் மருத்துவர் எப்பொழுதாவது ஸ்டீராய்டு மாத்திரையைப் பரிந்துரைப்பார். குறைந்த காலம் எடுக்கையில், இதனால் எந்த பாதிப்பும் இருக்காது.
கட்டுக்கதை:
ஆஸ்துமா வரும் போகும். அது எப்பொழுதும் இருக்காது.
உண்மை:
ஆஸ்துமாவின் நோய்க்குறிகளான மார்பு இறுக்கம், மூச்சுத் திணறல், இருமல் மற்றும் வீசிங் வந்து வந்து போகலாம். ஆனால் ஆஸ்துமா எப்பொழுதும் இருக்கும். ஆஸ்துமா வருவது போவதைப் பற்றி அறியாமல் இருந்தாலும். ஒருவர் அதற்கான நோய்க்குறிகள் இருந்தால் மட்டுமே மருந்தைப் பயன்படுத்த வேண்டும்.
ஆஸ்துமா என்பது தொடர்ந்து (அதிக காலம்) இருக்கும் நோய் என்பதால் நோயாளி நோய்க்குறி இல்லாவிட்டாலும் தொடர்ந்து மருந்து எடுப்பது அவசியம்.
நுரையீரல் சுவாசப்பாதையில், ஆஸ்துமா கட்டிகளை உருவாக்கும் என்பதால், உங்கள் நோய்க்குறி இல்லாததால் மருந்து எடுக்காவிட்டால், நீங்கள் உங்களையே கஷ்டப்படுத்துகிறீர்கள். மேலும் அட்டாக் வரும்போது அதிக காலம் எடுக்கும்.
கட்டுக்கதை:
ஆஸ்துமாவைக் குணப்படுத்தி விடலாம்.
உண்மை:
மருத்துவ அறிவியல் ஆய்வின்படி, துரதிஷ்டவசமாக, ஆஸ்துமாவைக் குணப்படுத்த முடியாது. ஹோமியோபதி அல்லது ஆயுர்வேதம் அல்லது மீன் சிகிச்சை அல்லது யோகா எதனாலும் ஆஸ்துமாவைக் குணப்படுத்த இயலாது.
அலோபதியில், இதை சிகிச்சை மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம். திரைப்பட நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் வேலையிலிருப்பவர்கள் அவர்களின் வாழ்க்கைக் குறிக்கோளை அடைய ஆஸ்துமா தடையாக இல்லை. அதனால் உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், அது உங்களைத் தடுக்க விடாதீர்கள்.
தொடர் சிகிச்சை மூலம் முழுமையாக ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்கலாம்.
உங்களுக்கு அதிக ஆஸ்துமா நோய்க்குறிகள் இல்லாததால் ஆஸ்துமா சென்றுவிட்டதாக அர்த்தம் இல்லை.
கட்டுக்கதை:
உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால் சாதாரண வாழ்வு வாழ இயலாது.
உண்மை:
நீங்கள் சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்யமான வாழ்வை ஆஸ்துமா இருந்தாலும் வாழலாம். உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ ஆஸ்துமா இருந்தால், நீங்கள் சாதாரணமான வாழ்வை வாழமுடியும் என்பதற்கு உறுதியளிக்கலாம். நீங்களும் உங்கள் குழந்தையும் உங்கள் மருத்துவர் ஆலோசனையைப் பின்பற்றினால், நீங்கள் ஆஸ்துமா பற்றி தெரிந்துகொண்டால், உங்கள் இன்ஹேலர்
மருந்தை சரிவர
மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்தால், மேலும் உங்கள் காரணிகளைத் தவிர்த்தால், உங்கள் வாழ்விலோ, கனவிலோ ஆஸ்துமா வர வாய்ப்பே இல்லை. பல பெண் மற்றும் ஆண் வெற்றியாளர்கள் – திரைப்பட நடிகர்கள், தொழில் அதிபர்கள், மருத்துவர்கள், கிரிக்கெட் வீரர்கள், ஒலிம்பிக் தங்கப்பதக்க வீரர்கள் உட்பட பலருக்கு ஆஸ்துமா இருந்தும் அவர்கள் அவர்களின் வாழ்வை சாதாரணமாக மற்றும் சுறுசுறுப்பாக வாழ்கின்றனர்.
கட்டுக்கதை:
உங்களுக்கு ஆஸ்துமா இருந்தால், நீங்கள் உடற்பயிற்சி செய்யவோ அல்லது விளையாடவோ முடியாது.
உண்மை:
உங்களுக்கு ஆஸ்துமா இருப்பினும் நீங்கள் உடற்பயிற்சி செய்யலாம் மற்றும் விளையாடலாம். ஆனால் உங்கள் மருந்தை நீங்கள் சரிவர எடுக்க வேண்டும். நீச்சல் ஆஸ்துமாவிற்கு நல்லது. வேறு சிலருக்கு, வறட்சியான உடற்பயிற்சி, குளிர் காற்று ஆகியவை ஆஸ்துமாவிற்கு காரணியாக இருக்கலாம். இருந்தபோதிலும் நீங்கள் உங்கள் கன்ட்ரோலர் (Controller) மருந்தை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பின்படி அடிக்கடி எடுப்பது முக்கியம். சில ஆஸ்துமா நோயாளிகளுக்கு உடற்பயிற்சிக்குப் பிறகு ரிலீவரைப் பயன்படுத்துவது பலனைத் தரும். அதனால் உங்கள் ரிலீவரை எப்பொழுதும் கூடவே வைத்திருக்கவும். கூடுதல் மருந்தை எடுத்துச்செல்ல மறக்கவேண்டாம். உங்களுடன் வேலை செய்பவர்கள், நண்பர்கள் மற்றும் உங்கள் ஜிம் மாஸ்டர் அல்லது கோச் ஆகியோரிடம் உங்களுக்கு அட்டாக் வந்தால் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெரிவிக்கவும்.
ஆஸ்துமாவிற்கான நல்ல உடற்பயிற்சி யோகா, நீச்சல் மற்றும் குறுகிய தூர ஓட்டப்பந்தயம் ஆகியவை. தொடர்ந்து ஓடாமல் இடைவேளி விடுதல் சிறந்தது. நீங்கள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சியில் ஆர்வமாக இருந்தால் அதைப்பற்றி அடிக்கடி உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.
உங்கள் எதிர்கால கனவுகளில் குறுக்கிடும்படி ஆஸ்துமாவை விடாதீர்கள். விளையாட்டு அல்லது வாழ்க்கையில் வெற்றியாளராக இருக்க ஆஸ்துமா தடையில்லை. முக்கிய கிரிக்கெட் வீரர்கள், நீச்சல் வீரர்களுக்கும் ஆஸ்துமா உள்ளது. ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரர்களுக்கும் ஆஸ்துமா உள்ளது என்று சொன்னால் நம்புவீர்களா?
கட்டுக்கதை:
என் ஆஸ்துமாவைக் கட்டுப்பாட்டில் வைக்க நிறைவான மற்றும் மாற்று சிகிச்சைகள் எனக்கு உதவும்.
உண்மை:
இல்லை! ஹோமியோபதி, ஆயுர்வேதம், மூலிகை மருத்துவம், அக்குபஞ்சர் மற்றும் மீன் சிகிச்சை போன்ற சிறந்த/மாற்று சிகிச்சைகள் உங்கள் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த உதவாது. அவற்றின் பயனை நிரூபிக்க எந்த தகவலும் இல்லை. ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்க இந்த சிகிச்சைகளால் எந்த பயனும் இல்லை என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டது. அத்தகைய சிகிச்சைகளில் ஏற்படக்கூடிய சில பக்கவிளைவுகளால் அத்தகைய மருந்துகளின் பாதுகாப்புக் குறித்து போதிய தகவல்கள் இல்லை.
தயவுசெய்து ஆஸ்துமா அட்டாக்கின்போது சிறந்த மருந்துகளின் மூலம் நிவாரணம் பெறமுடியாது என்பதை நினைவில் கொள்ளவும்.
அவை உங்கள் இன்ஹேலேஷன் சிகிச்சைக்கு மாற்று இல்லை. அதனால் நீங்கள் இதில் ஒன்றை பயன்படுத்த நினைத்தாலும் உங்கள் முதன்மை மருந்தை தவிர்க்க வேண்டாம். உங்கள் மருத்துவரிடம் சிறந்த சிகிச்சை பற்றி முதலில் கலந்துரையாடவும், அவரின் ஆலோசனையைப் பெற்றபின் நீங்கள் தொடரலாம்.
மாற்று மருந்துகளைப் பயன்படுத்திய பின், ஆஸ்துமா உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் எவ்வாறு இன்ஹேலேஷன் சிகிச்சைக்கு மாறினார்கள் என்பதைப் பார்க்கவும்.
கட்டுக்கதை:
ஆஸ்துமா வேறு ஒருவரிடமிருந்து வரக்கூடிய தொற்றுநோய்.
உண்மை:
இல்லை, ஆஸ்துமா தொற்று அல்ல. நீங்கள் ஆஸ்துமாவை எவரிடமிருந்தும் பெற வாய்ப்பில்லை. மேலும் வீட்டிலோ அல்லது வேலையிலோ யாருக்கும் அதனால் தொற்று ஏற்படாது
கட்டுக்கதை:
கர்ப்பமாக இருக்கும் பெண் ஆஸ்துமா இன்ஹேலரைப் பயன்படுத்தக்கூடாது.
உண்மை:
குழந்தை இன்ஹேலரைப் பயன்படுத்தும்போது, கர்ப்பிணிப் பெண்ணும் பயன்படுத்தலாம். உண்மையில், கர்ப்பிணிப் பெண் ஆஸ்துமா இன்ஹேலரைத் தொடர்ந்து பயன்படுத்துதல் முக்கியம். அது அவருக்கு ஆரோக்கியமான குழந்தையைப் பெற உதவும்.
இன்றைய தினம் இன்ஹேலர்கள் பாதுகாப்பானவை.
குழந்தைகளைப் பாதிக்காவண்ணம், பாலூட்டும் தாய்மார்களும் இதைப் பயன்படுத்தலாம். ஏனென்றால், மாத்திரையைவிட இன்ஹேலர் மருந்தின் வீரியம் 40 மடங்கு குறைவு.
கட்டுக்கதை:
பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) விலையுயர்ந்தது மற்றும் பயன்படுத்துவது சுலபமில்லை.
உண்மை:
இரத்தக் கொதிப்பைக் கண்டறிய பீபி கருவி, சர்க்கரைக்கு க்ளூக்கோ மீட்டர் போல,
ஆஸ்துமாவைக் கண்டறிய தெர்மோமீட்டர்
போல, ஆஸ்துமாவிற்கு பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer). இது விலைகுறைந்த, கையடக்கமான, பயன்படுத்த எளிதான, பராமரிக்க ஏதுவான ஒரு கருவி. உங்கள் ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைக்க, கண்டறிய மற்றும் பாதுகாக்க இக்கருவியை இருவாரத்திற்கு ஒருமுறைப் பயன்படுத்தவேண்டியது அவசியம். உங்களுக்கு ஆஸ்துமா இருந்து நுரையீரல் இயக்கத்தை பீக் ஃப்ளோ மீட்டரைப்(சுவாச மீட்டர்) பயன்படுத்தி கணக்கிடுகிறீர்கள் மற்றும் அளவு குறைந்திருந்தால் அது உங்கள் ஆஸ்துமா கன்ட்ரோலில் இல்லாததைக் குறிக்கிறது மேலும் சில நாளில் அல்லது விரைவில் அட்டாக் வர வாய்ப்புள்ளது. உங்கள் மருந்தின் அளவு மற்றும் அதை எடுக்கும் தடவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான முன்னெச்சரிக்கை இது. பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) அளவு சாதாரணமாக இருந்தால் உங்கள் ஆஸ்துமா கன்ட்ரோலில் உள்ளதாக அர்த்தம்.
கட்டுக்கதை:
ஆஸ்துமா வரலாறு ஒருவரின் பெற்றோர்களுக்கு இல்லையென்றால் அது அவருக்கு வர வாய்ப்பில்லை.
உண்மை:
இருந்தாலும் உங்கள் குடும்பத்தில் யாருக்காவது அலர்ஜி வரலாறு இருந்தால் உங்களுக்கு ஆஸ்துமா வரலாம். அதாவது பெற்றோர்களாக இருக்கத் தேவையில்லை, ஆனால் சகோதரர், தாத்தா-பாட்டி, மாமா-அத்தை போன்ற உடனடி உறவினர்கள் யாருக்காவது இருந்தாலும் வரலாம். கூடுதலாக, காரணிகளும் உங்களுக்கு ஆஸ்துமா அட்டாக்கை உருவாக்கலாம்.
கட்டுக்கதை:
நீங்கள் ஆஸ்துமாவிலிருந்து குணமடையலாம் அல்லது வயதாக ஆக ஆஸ்துமா குறையலாம்.
உண்மை:
ஆஸ்துமா வாழ்நாள் முழுதும் இருக்கக்கூடியது. குழந்தையின் ஆஸ்துமா நாளாக ஆக குறையலாம் அல்லது அதிகரிக்கலாம். சிறு குழந்தையின் ஆஸ்துமா அவர்கள் (அவர் நுரையீரல்) வளர வளர குறையலாம். ஆனால் பலருக்கு ஆஸ்துமா அவர்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கும்.
கட்டுக்கதை:
உங்களுக்கு சுவாசப் பிரச்சனையிருந்தால் மட்டுமே ஆஸ்துமா இருக்கும்.
உண்மை:
ஆஸ்துமா இருப்பவருக்கு இது எப்போதும் இருக்கும். நீடித்த(அதிக காலம்) நிலை மற்றும் சுவாசப்பாதைக் கட்டி (நீர்க்கட்டி) எப்பொழுதும் இருக்கலாம், உங்களுக்கு அதிக நோய்க்குறிகள் இல்லாதபோதும். ஆயினும், நுரையீரல் கட்டியை சரிசெய்யாமல் விட்டால் நீடித்த காலஅளவில் உங்கள் நுரையீரல் சக்தி குறைந்துவிடும் என்று மருத்துவ ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. உங்கள் தினசரி கன்ட்ரோலர் (Controller) மருந்தை எடுத்தும் மற்றும்
ஆஸ்துமா காரணிகளைத்
தவிர்த்தும் ஆஸ்துவாவைக் கன்ட்ரோலில் வைக்கவும்.
கட்டுக்கதை:
ஆஸ்துமா அட்டாக் திடீரென்று வரும் மற்றும் உடனே அது அதிகரிக்கும்.
உண்மை:
பல ஆஸ்துமா அட்டாக்குகள் மெதுவாகவே தொடங்குகின்றன – அவை ஒன்று அல்லது பல நாள் உடல்கோளாறுக்குப் பின்னே வருகின்றன. எடுத்துக்காட்டாக, அட்டாக் வருவதற்கு முன் மெதுவான மூச்சுத்திணறல் அல்லது வீசிங் வரும். அதனால், உங்கள் நெஞ்சில் ஏற்படும் மாற்றத்தில் கவனம் செலுத்தவும், உங்கள் காரணிகளை (மார்பு இறுக்கம், மூச்சுத்திணறல், இருமல் மற்றும் வீசிங்) அறிய பழகுங்கள். தேவைப்பட்டால் உங்கள் ஆஸ்துமா பற்றிய தினசரி குறிப்பை வைத்திருங்கள் மேலும் உங்கள் காரணிகளுடனான தொடர்பைத் தவிர்க்கவும்.
நீங்கள் சாதாரணமான பீக் ஃப்ளோ மீட்டர் (Breathometer) அளவை
உங்கள் ஆஸ்துமா அட்டாக்கை யூகிக்க மற்றும் தடுக்க
உதவும் என்பதால் வைத்திருக்கவும். தயவுசெய்து உங்களுக்கு அதிக ஆஸ்துமா நோய்க்குறிகள் இல்லாதபட்சத்தில் உங்கள் ஆஸ்துமா போய்விட்டது என நினைக்க வேண்டாம்.
கட்டுக்கதை:
ஸ்டீராய்டு மருந்து கடுமையான ஆஸ்துமா உள்ள பெரியவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அதேசமயம் குழந்தைகளுக்கு இல்லை.
உண்மை:
இன்ஹேலர் ஸ்டீராய்டுகள் தொடர் ஆஸ்துமா உள்ள பெரியோர் மற்றும் குழந்தைகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. இன்ஹேலர் ஸ்டீராய்டு மிதமான மற்றும் கடுமையான ஆஸ்துமா உள்ள குழந்தைகளுக்கு குறைந்த அளவே பரிந்துரைக்கப்படும். ஆயினும், உள்ளிழுக்கும்போது மாத்திரை மற்றும் சிரப்புகளிலிருந்து இதன் வீரியம் 40 மடங்கு குறைவே. மேலும் அது எங்கு அதிக அளவில் தேவைப்படுகிறதோ அங்கு மட்டும் செல்வதால், அதாவது நுரையீரலுக்கு மட்டுமே செல்வதால். பக்கவிளைவுகள் குறைந்தும் அதிக பிரச்சனையளிக்காமலும் இருக்கும்.
கட்டுக்கதை:
ஆஸ்துமா நோய்க்குறிகள் அனைவருக்கு ஒன்றே.
உண்மை:
ஆஸ்துமா ஒவ்வொருவரையும் வெவ்வேறு வழியில் தாக்கலாம். ஒருவருக்கு வீசிங், நெஞ்சிறுக்கம் மற்றும் இளைப்பு போன்ற பல நோய்க்குறிகள் இருக்கலாம், வேறு சிலருக்கு இருமல் மாத்திரமே இருக்கலாம். நீங்கள் உங்களுக்கான நோய்க்குறிகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும், அது விரைவில் குணமடைய உதவும்.
கட்டுக்கதை:
ஆஸ்துமாவினால் யாரும் இறக்கமாட்டார்கள்
உண்மை:
துரதிஷ்டவசமாக, ஆம், ஆஸ்துமாவால் ஒருவர் இறக்கலாம். உலக சுகாதார மைய அறிக்கையின்படி, உலகத்தில் வருடத்திற்கு 2,50,000 பேர் ஆஸ்துமாவினால் ளஇறக்கின்றனர் என தெரியவந்துள்ளது.
முதலிலேயே ஆஸ்துமா இருப்பது தெரியாவிட்டால் இறப்பு வரலாம் அல்லது நோயாளி அட்டாக்கின்போது ரிலீவரை கையில் வைத்திருக்காமல் இருந்தால் வரலாம்.
நோயாளி இறப்பை நெருங்குகின்றாரா என கண்டுபிடிக்கும் ஒரே வழி, ஒருவர் ஒருநாளைக்கு 10 முறைக்கும் அதிகமாக இன்ஹேலர் எடுத்துக்கொண்டால் அல்லது ஒரு மாதத்திற்கு இரண்டு அல்லது அதற்கு மேலும் இன்ஹேலர் பயன்படுத்தினால் இது ஆஸ்துமா கட்டுப்பாட்டில் இல்லை என்பதைக் காட்டுகிறது. நெபுலைஷேஷனுக்காக ஒருவர் அடிக்கடி மருத்துவரிடம் சென்றால் அவர் பிரச்சனையில் உள்ளார் என அர்த்தம்.
ஆஸ்துமா எல்லா வயதினர் மற்றும் சமூகத்தில் எல்லா மட்டத்தினரையும் பாதிக்கும். மேலும் இது இறப்பிற்கு வழிவகுக்கும் என்றாலும் அதனைக் கட்டுப்பாட்டில் வைக்கலாம். ஆஸ்துமாவிலிருந்து பல இறப்புக்களைத் தடுக்கவும் முடியும்.
அதனால் தயவுசெய்து உங்கள் அல்லது உங்கள் குழந்தையின் ஆஸ்துமாவை முக்கியமாக கருதி செயல்படவும், சரியான சிகிச்சை எடுக்கவும்.
©2010 ப்ரீத் ஃப்ரீ(Breathe Free), அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
கைதுறப்பு
|
வலைத்தள வரைபடம்
|
எங்களைத் தொடர்புகொள்க