குழந்தைகளிடையே காணப்படும் ஆஸ்துமா
|
|
|
பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் சந்தோஷமான, ஆரோக்யமான மற்றும் சுறுசுறுப்பான குழந்தைப் பருவத்தை அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். உங்கள் குழந்தைக்கு ஆஸ்துமா இருந்தால், நீங்களும் அதை எதிர்பார்க்கலாம். ஆஸ்துமாவை சரியான சிகிச்சையால் முழுதும் கன்ட்ரோலில் வைக்கலாம். அதனால் உங்கள் குழந்தைக்கு ஆஸ்துமா இருந்தால் கவலைப்பட வேண்டாம். எங்கள் படம் “ஆஸ்துமா பார் விஜய்” என்பதைக் கிளிக் செய்யவும். எப்படி ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் சாதாரண குழந்தைகளைப் போல் வாழ்கிறார்கள் என்பதைப் பார்க்கவும். உங்கள் குழந்தையும் எல்லாவற்றையும் செய்யலாம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். ஆம், பள்ளிக்கு சரிவர செல்லுதல், ஐஸ் க்ரீம் சாப்பிடுதல் மற்றும் சுறுசுறுப்பான விளையாட்டை விளையாடுவது போன்றவை இயல்பாக நடக்கும்.
குழந்தைகளுக்கு வரும் ஆஸ்துமா பெரியவர்களுக்கு வருவதிலிருந்து மாறுபட்டது. குழந்தைகளுக்கு குறிப்பிட்ட ஆஸ்துமா நோய்க்குறிகள் – மூச்சுத்திணறல், வீசிங், இருமல் மேலும் மார்பு இறுக்கம் ஆகியவை ஏற்படாது. மேலும், குழந்தைகளிடையேயும் ஆஸ்துமா வேறுபடும். சில குழந்தைகளுக்கு மிதமான ஆஸ்துமாவும் சிலருக்கு கடுமையான ஆஸ்துமாவும் இருக்கும். சிலருக்கு அடிக்கடி இருமலும் சிலவகை அலர்ஜிகளும் ஏற்படும்.
குழந்தைகளிடையே பொதுவாக நீடித்து (அதிக காலம்) காணப்படும் சாதாரண நோய் இது. யு.கே-இல் 11 -இல் 1 குழந்தைக்கு ஆஸ்துமா உள்ளது. யு.எஸ்.எ-இல் 7 மில்லியன் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு 12 குழந்தைகளில் ஒருவருக்கு ஆஸ்துமா உள்ளது. அதனால், உங்கள் குழந்தைக்கு ஆஸ்துமா இருப்பது கண்டறியப்பட்டால், கவலை வேண்டாம். நீங்கள் மட்டும் இதற்கு ஆளாகவில்லை.
ஆயினும், அடிக்கடி பெற்றோர்கள், ஆஸ்துமா தங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும் சமுதாய இழுக்காக எண்ணி கவலைப்படுகிறார்கள். ஆகையால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஆஸ்துமா உள்ளதென்று அலோபதி மருத்துவர் கண்டறிந்து சொன்னால், ஆஸ்துமாவிற்கான அலோபதி மருத்துவம் பக்கவிளைவுகளை உண்டாக்குமெனக் கருதி, அவர்கள் வேறுவகையான மாற்று மருத்துவத்தை நாடிச் செல்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் ஆஸ்துமா குறித்த சந்தேகங்கள். இதுவரைப் படித்ததிலிருந்து உங்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விடை கிடைத்திருக்கும். மேலும் உங்களின் குழந்தைக்குள்ள ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த எவ்வாறு உதவுவது என்பதை அறிந்திருக்கவும். |
|