75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு
CIPLA -ஆல் தொடங்கப்படும் பொதுச் சேவையே ப்ரீத்ஃப்ரீ (Breathefree). ஆஸ்துமாவால் அவதிப்படும் உங்களுக்கோ அல்லது உங்கள் அருகிலுள்ளவருக்கோ உதவும் வண்ணம் உருவாக்கப்பட்டது இது. இந்தியாவிலேயே முதன்மையான மருந்து தயாரிப்பு நிறுவனம் முழு பலத்துடன் சுவாச நோய்களுடன் போராடுகிறது. Cipla ப்ரீத்ஃப்ரீயின் (Breathefree) தொடக்கத்திற்கு பின்னுள்ள சிறந்த நிறுவனமாகும்.
ப்ரீத்ஃப்ரீ (Breathefree) தொடர்ந்து பல விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளாகிய ப்ரீத்ஃப்ரீ (Breathefree) முகாம்கள், ப்ரீத்ஃப்ரீ (Breathefree) க்ளினிக்குகள், ப்ரீத்ஃப்ரீ (Breathefree) விழிப்புணர்வு ஆவணங்கள் மற்றும் நீங்கள் தற்போது உள்நுழைந்த இணையதளம் போன்ற பலவற்றை நடத்திக்கொண்டிருக்கின்றது. பல ப்ரீத்ஃப்ரீ (Breathefree) தொடக்கங்கள் இருந்தாலும், அவை அனைத்தின் காரணமும் ஒன்றே. இந்தியா மற்றும் உலகில் பல இடங்களில் உள்ளவர்களின் ஆஸ்துமாவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. (Link to Welcome to breathefree.com) அதனால் அவர்கள் வேலை, உடற்பயிற்சி, விழாக்கள், விடுமுறைகளை முழுமையாக மகிழ்ந்து சுறுசுறுப்பான வாழ்வை வாழலாம்.
breathefree.com -க்கு வரவேற்கிறோம்
உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைக்கோ ஆஸ்துமா எனக் கண்டறியப்பட்டால் நீங்கள் பீதியடையவோ அல்லது கவலைப்படவோ தேவையில்லை.
இன்றைய தினத்தில் ஆஸ்துமா உள்ளவர்கள் அவர்களின் வாழ்க்கைமுறையை விட்டுக்கொடுக்காமல் சராசரி வாழ்வை வாழலாம்.
உலகத்தில் சுமார் 300 மில்லியன் மக்களும் இந்தியாவில் 30 மில்லியன் மக்களும் ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீங்கள் மட்டும் இதற்கு ஆளாகவில்லை. வெற்றிகரமாக வாழும் பலருக்கும் ஆஸ்துமா இருக்கிறது. சில தொழிலதிபர்கள், திரை நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கும் உள்ளது. அவர்களைப் போலவே
நீங்களும் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தி முழுமையான வாழ்வை வாழலாம்.
Breathefree.com இது எப்படி சாத்தியம் என்பதைக் காண்பிக்கின்றது. ஆஸ்துமாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நீடித்த (அதிக கால) நோயை சமாளிப்பதற்கான தக்க அறிவையும்,
நம்பிக்கையையும் கொடுத்து ஒரு முழுமையான வாழ்வை வாழ்வதற்கு உதவ உருவாக்கப்பட்டது.
அதனால் உங்களுக்கோ உங்கள் குழந்தைகளுக்கோ தொடர் இருமல், அலர்ஜி, சுவாசப் பிரச்சனை, கடுமையாள சளி, மார்பக தொற்று அல்லது சுவாச அல்லது மார்பக நோய்க்குறி இருந்தால் நீங்கள் வந்துள்ள இடம் சரியே.
Breathefree.com இல் ஆஸ்துமா தொடர்பான எல்லாவற்றையும் தெரிந்துகொள்ளலாம். எவ்வாறு மக்கள் அவர்களின் ஆஸ்துமாவைக் கன்ட்ரோலில் வைத்து சாதாரண வாழ்வை வாழ்கிறார்கள்,
மேலும் எவ்வாறு ஆஸ்துமாவுடன் முழுமையான வாழ்வு வாழலாம் என்பவற்றை அறிந்து கொள்ளலாம்.